عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الخِنْزِيرَ، وَيَضَعَ الجِزْيَةَ، وَيَفِيضَ المَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2222]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2222]
மக்களுக்கு மத்தியில் நீதி மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஆ சட்டதிட்டங்களின் மூலம் ஆட்சி புரிவதற்கென ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானிலிருந்து இறங்கும் காலம் நெருங்கிவிட்டது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சத்தியமிட்டு குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு இறங்கிய வேளை, கிறிஸ்தவர்கள் புனிதப்படுத்தும் சிலுவையை உடைத்திடுவார். பன்றியைக் கொல்வார். மேலும் அவர்கள் மக்களின் வரியை நீக்கி விட்டு அவர்கள் அனைவரையும் இஸ்லாத்தினுள் நுழையுமாறு தூண்டுவார். செல்வம் பெருகி அதனை பெற்றுக்கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள். காரணம் செல்வம் ஒவ்வொருவரிடமும் அதிகமாக காணப்படுவதாலும் பரக்கத் மற்றும் நன்மையும் தொடர்ந்தும் இறங்குவதினாலும் அவர்கள் தன்னிடமுள்ளவற்றைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வர்.