عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
«كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى»، قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 7280]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'எனது சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் ஏற்க மறுத்தோரை தவிர' என்று கூறினார்கள். அதற்கு 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர்கள்; யார்?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 7280]
சத்தியத்தை விட்டு விலகி, நபியவர்களின் வழிமுறையை கடைப்பிடிக்காது நடந்தோரைத் தவிர மற்ற அனைவரும் தனது சமூகத்தில் சுவர்க்கம் செல்வார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீதிஸில் தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறு கூறியபோது ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! விலகிக்கொண்டோர், அல்லது தவிர்ந்து கொண்டோர் என்பவர்கள் யார்? என வினவினார்கள்.
உடனே அதற்கு யார் நபியவர்களுக்கு கட்டுப்பட்டு, அவரைப் பின்பற்றி ஒழுகுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வார். யார் நபிவர்களுக்கு மாறு செய்து அவர் கொண்டுவந்த மார்க்க சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாது நடக்கிறாரோ அவர் தனது தவறான செயற்பாடுகளின் காரணமாக சுவர்க்கம் நுழைவதிலிருந்து விலகிக் கொள்வார் என நபியவர்கள் பதிலளித்தார்கள்.