عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ».
[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 2417]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூபர்ஸதுல் அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
((மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.))
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்] - [سنن الترمذي - 2417]
மறுமை நாளில் சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ எவரும் சில விடயங்கள் குறித்து விசாரிக்கப்படும் வரை விசாரணை மன்றத்தை தாண்டி செல்ல முடியாது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முதலாவது : மனிதனின் வாழ்வு குறித்தாகும.; தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தான்? என்பது பற்றியதாகும்
இரண்டாவது : தனது அறிவு பற்றியதாகும் அதனை அல்லாஹ்வுக்காக கற்றானா? அதன் படி செயல்பட்டானா? அக்கல்வியை தகுதியானவர்களுக்கு எத்திவைத்தானா? போன்ற கேள்விகள் அவனிடம் கேட்கப்படும்.
மூன்றாவது: தனது செல்வம் குறித்தாகும். அதாவது செல்வத்தை எவ்வழியில் சம்பாதித்தான் ஹலாலான முறையிலா அல்லது ஹராமான முறையிலா ? அவ்வாறு சம்பாதித்த செல்வத்தை அல்லாஹ் விரும்புகின்ற விடயத்திலா அல்லது அல்லாஹ் விரும்பாத விடயத்திலா செலவு செய்தான் போன்ற கேள்விகள் அவனது செல்வம் குறித்து கேட்கப்படும்.
நான்காவது : உடல் பற்றியதாகும் அதாவது அவனின் பலத்தையும், ஆரோக்கியத்தையும் அதன் வாலிபப்பருவத்தையும் எவ்வாறான விடயங்களில் ஈடுபடுத்தினான்? என்பது பற்றி கேள்வியாகும்