عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا طَلَعَتْ فَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ، فَذَلِكَ حِينَ: {لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ، أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا} [الأنعام: 158] وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ نَشَرَ الرَّجُلاَنِ ثَوْبَهُمَا بَيْنَهُمَا فَلاَ يَتَبَايَعَانِهِ، وَلاَ يَطْوِيَانِهِ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدِ انْصَرَفَ الرَّجُلُ بِلَبَنِ لِقْحَتِهِ فَلاَ يَطْعَمُهُ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهُوَ يَلِيطُ حَوْضَهُ فَلاَ يَسْقِي فِيهِ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ رَفَعَ أَحَدُكُمْ أُكْلَتَهُ إِلَى فِيهِ فَلاَ يَطْعَمُهَا».

[صحيح] - [متفق عليه]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
'மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் நிகழாது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்.(ஆனால்,இந்நிகழ்வுக்கு முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது 'இறைநம்பிக்கை கொண்டிருந்தும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் நம்பிக்கை கொள்வது பயனளிக்காது.' (அன்ஆம் :158) இரண்டு பேர் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும், ஒருவர் மடிகனத்த தம் ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போது தா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார்; இன்னும் அதைப் பருகிக் கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார்; அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்'

ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதற்கு பதிலாக மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்பதையும்,இப்பெரு நிகழ்வை மக்கள் பார்த்ததும் அனைவரும் அல்லாஹ்வை ஈமான் -நம்பிக்கை- கொள்வார்கள் என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வேளை காபிரின் -இறைநிராகரி;பபாளனின் ஈமானோ, நற்காரியங்களோ, தவ்பா-பாவமீட்சியோ- எவ்விதப்பயனையும் தரமாட்டாது. தொடர்ந்தும் நபியவர்க்ள இந்த ஹதீஸில் ' மக்கள் அனைவரும் அவர்களின் அனறாட விவகாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்; நிலையில் திடிரென எதிர்பாராத விதமாக மறுமை சம்பவிக்கும் என அறிவிக்கிறார்கள். விற்பவரும்,வாங்குபவரும் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள் அவ்வாறு இருக்கும் நிலையில் மறுமை சம்பவிக்கும். ஒருவர் மடியில் பால் நிறைந்த தம் ஒட்டகத்தில் பால் கறந்து இன்னும் அதைப் பருகிக் கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் நீர் தொட்டியை அப்போதுதான் கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் உணவை சாப்பிடுவதற்காக வாயருகில் கொண்டு சென்றிருப்பார்; அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இஸ்லாத்தை தழுவுதல்,தவ்பா-பாவமீட்சி கோருதல் போன்றவை மறுமை நாளின் பெரிய அடயாளமான மேற்கிலிருந்து சூரியன் உதித்தல் எனும் பெரு நிகழ்வு சம்பவிக்கும் வரை அங்கீகரிக்கப்படும்;.
  2. மறுமை நாள் திடீரென நிகழ இருப்பதால் ஈமான் மற்றும் நற்செயல்களின் மூலம் மறுமைக்காக தயாராகும் படி வலியுறுத்தப்பட்டிருத்தல்.
மேலதிக விபரங்களுக்கு