+ -

عن المقدام بن معدِيْكَرِب قال: قال رسول الله صلى الله عليه وسلم: (ألا هل عسى رجلٌ يبلغه الحديث عني وهو متكئ على أريكته فيقول: بيننا وبينكم كتاب الله، فما وجدنا فيه حلالًا استحللناه، وما وجدنا فيه حرامًا حرمناه. وإن ما حرم رسول الله كما حرم الله).
[صحيح] - [رواه أبو داود والترمذي وابن ماجه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மிக்தாத் பின் மஃதீயக்ரிப் (ரலி) கூறினார்கள் : "தனது சோபாவில் சாய்ந்து கொண்டு எனது பொன்மொழி கிடைக்கும் போது எமக்கும் உமக்கும் இடையில் அல்லாஹ்வின் வேதமுள்ளது, அதிலே ஹலாலாக உள்ளதை நாமும் ஹலாலாக்குவோம், அதிலே ஹராமாக உள்ளதை நாமும் ஹராமாக்குவோம் எனக் கூறும் ஒரு மனிதன் தோன்றுவான், நிச்சயமாக இறைத்தூதர் ஹராமாக்கியதும் இறைவன் ஹராமாக்கியது போன்றுதான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

மக்களில் தனது நபிமொழிகளை புனிதப்படுத்தாத ஒரு சாராரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். சிலர் அறவே ஸுன்னாவை ஆதாரமாகக் கொள்ளாமல், பொருட்படுத்தாமல் உள்ளனர். அவர்களில் ஒருவன் தனது சோபாவில் சாய்ந்து கொண்டு நபிமொழிகளில் ஒன்று கிடைக்கும் போது, அதனைத் தட்டிவிட்டு, எமக்கும் உமக்கும் இடையில் அல்லாஹ்வின் வேதமுள்ளது, அதிலே ஹலாலாக உள்ளதை நாமும் ஹலாலாக்குவோம், அதிலே ஹராமாக உள்ளதை நாமும் ஹராமாக்குவோம் எனக் கூறுவான். அவன் தனக்குக் கிடைத்த நபிமொழியை உண்மைப்படுத்தவோ, அமுல்படுத்தவோ மாட்டான். தனது ஒரே மூலாதாரமாக அல்குர்ஆனை மாத்திரமே வாதாடுவான். உண்மையில் அவன் அல்குர்ஆனை அமுல்படுத்தினால் ஸுன்னாவையும் அமுல்படுத்தியிருப்பான். ஏனெனில் குர்ஆனே ஸுன்னாவைப் பின்பற்றுமாறு ஏவுகின்றது. அல்குர்ஆனை எமக்கு அறிவித்துத் தந்த அதே உத்தமர்கள் தான் ஸுன்னாவையும் எமக்கு அறிவித்துத் தந்தார்கள். அல்லாஹ் ஹராமாக்கியதும், தான் ஹராமாக்கியதும் சமம் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். நபியவர்கள் ஹராமாக்குவதும் அல்லாஹ்விடமிருந்து தான். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து எத்திவைப்பவர். அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية القيرقيزية النيبالية اليوروبا الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية الكينياروندا
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபிமொழிகளையும், அவற்றிலுள்ள ஏவல், விலக்கல்களையும் புனிதப்படுத்துவது அவசியமாகும்.
  2. நபிமொழியை புனிதப்படுத்துவது அல்குர்ஆனைப் புனிதப் படுத்துவதில் உள்ளதாகும்.
  3. நபியவர்கள் ஹராமாக்குவதும் அல்லாஹ்விடமிருந்து தான்.
  4. நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வது அல்லாஹ்வைுக்கு மாறு செய்வதாகும்.
  5. ஸுன்னாவைப் புறக்கணித்து விட்டு, அல்குர்ஆனுடன் போதுமாக்கிக் கொள்வதாக வாதாடுபவன் இரண்டையும் புறக்கணித்தவனாவான். குர்ஆனைப் பின்பற்றுவதாகக் கூறும் தனது வாதாட்டத்தில் பொய்யனாவான்.
மேலதிக விபரங்களுக்கு