عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، مَا تَرَكْتُ حَاجَّةً وَلَا دَاجَّةً إِلَّا قَدْ أَتَيْتُ، قَالَ: «أَلَيْسَ تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ؟» ثَلَاثَ مَرَّاتٍ. قَالَ: نَعَمْ، قَالَ: «فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ».
[صحيح] - [رواه أبو يعلى والطبراني والضياء المقدسي] - [الأحاديث المختارة للضياء المقدسي: 1773]
المزيــد ...
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த ஒரு பாவத்தையும் செய்யாது விட்டு விடவில்லை என்று கூற, நபியவர்கள் 'நீ அல்லாஹ்வைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறியிருக்கிறீர் அல்லவா? என மூன்று தடவைகள் கேட்டார்கள் அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அதற்கு நபியவர்கள் 'அந்த வார்த்தைகள் அவற்றை அழித்துவிடும் என்று கூறினார்கள்
[ஸஹீஹானது-சரியானது] - - [الأحاديث المختارة للضياء المقدسي - 1773]
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் எல்லா வகையான பாவங்கள் மற்றும் குற்றங்கள் அனைத்தையும் செய்து விட்டேன் அவற்றில் சிறியது,பெரியது என எந்த ஒன்றையும் விடாது அனைத்தையும் புரிந்து விட்டேன். இவ்வாறான நிலையில் எனக்கு மன்னிப்புக்கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'நீ அல்லாஹ்வைத்தவிர உண்மையான இறைவன் வேறு யாறுமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறியிருக்கிறீர் அல்லவா? என்று கேட்டார்கள். இந்தக் கேள்வியை மூன்று தடவைகள் மீண்டும் மீண்டும் அம்மனிதரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் 'ஆம்' நான் சாட்சி கூறியிருக்கிறேன் என பதிலளித்தார்கள். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கலிமதுஸ்ஷஹாதாவின் (அல்லாஹ்வையும் அவனது தூதரான முஹம்மத் ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் ஏற்று சாட்சி கூறுவதன்) சிறப்பு பற்றியும் அவை பாவங்களுக்கு பரிகாரமாக அமைந்துவிடும் என்பதையும், தவ்பா –பாவமீட்சி கோருவது- முன்செய்த பாவங்களை அழித்துவிடுகிறது எனவும் கூறினார்கள்.