عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ، فَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ، وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ، وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ، وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ، وَتَكُونَ السَّاعَةُ كَاحْتِرَاقِ السَّعَفَةِ الْخُوصَةُ».

[صحيح] - [رواه أحمد]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'காலம் சுருங்காத வரையில் –காலத்தின் பரக்கத் எடுக்கப்படாத வரை- மறுமை நாள் ஏற்படமாட்டாது.அவ்வேளை வருடம் மாதம் போன்றும் மாதம் வாரம்; போன்றும் வாரம் நாள் போன்றும் நாள்மணித்தியாலம் போன்றும மணித்தியாலம்; ஈத்தம் ஓலை விரைவாக எரிந்துவிடுவதைப் போன்றும் இருக்கும்

ஸஹீஹானது-சரியானது - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

காலம் சுருங்கிப்போதல் மறுமையின் அடையாளங்களில் ஒன்று என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள் அவ்வேளை ஒரு வருடம் ஒருமாதம் போன்று கழிந்துவிடும் மாதம் ஒரு கிழமைபோன்று கடந்து சென்று விடும் ஒரு வாரம் ஒரு நாள் போன்று கடந்து சென்று விடும். ஒரு நாள் ஒரு மணித்தியாளம் போன்று கழிந்து விடும் காய்ந்த ஈத்தம் ஒலை எவ்வளவு விரைவாக கருகி எரிந்து விடுமோ அவ்வளவு விரைவாக ஒரு மணித்தியாளம் சென்று விடும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு உருது இந்தோனேஷியன் போஸ்னியன் சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மறுமையின் அடையாளங்களில் ஒன்று காலத்தின் பரக்கத் -விருத்தி- எடுக்கப்படுவதும் அல்லது அது விரைவாகச் செல்வதுமாகும்.
மேலதிக விபரங்களுக்கு