عَنْ أَبِي الحَوْرَاءِ السَّعْدِيِّ قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ رضي الله عنهما: مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: حَفِظْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ، فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَإِنَّ الكَذِبَ رِيبَةٌ».
[صحيح] - [رواه الترمذي والنسائي وأحمد] - [سنن الترمذي: 2518]
المزيــد ...
அபுல் ஹவ்ரா அஸ்ஸஃதி, (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம், 'நீங்கள் நபியவர்களிடமிருந்து எதைக் கேட்டு மனனமிட்டுள்ளீர்கள்?' என்று கேட்டபோது, அவர்கள் கூறினார்கள் : 'நான் நபியவர்கள் இவ்வாறு கூறியதை மனனமிட்டுள்ளேன்:
உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துபவற்றை விட்டுவிட்டு, சந்தேகத்தை ஏற்படுத்தாதவற்றை எடுத்துக்கொள். ஏனெனில், உண்மை மனஅமைதியைத் தரும். பொய் சந்தேகத்தைத் தரும்.'
[ஸஹீஹானது-சரியானது] - - [سنن الترمذي - 2518]
தடுக்கப்பட்டவையா? தடுக்கப்படாதவையா? ஹராமா? ஹலாலா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும், வார்த்தைகள் மற்றும் செயற்களை விட்டுவிட்டு, ஹலாலான, நல்லவை என நீங்கள் உறுதியாக அறிந்துவைத்துள்ள, சந்தேகமற்றவற்றை எடுத்துக்கொள்ளுமாறு நபியவர்கள் ஏவுகின்றார்கள். ஏனெனில், உள்ளம் அதில் நிம்மதியையும், அமைதியையும் காண்கின்றது. சந்தேகத்திற்கிடமானவற்றில், அது தடுமாற்றத்தையும், கலக்கத்தையும் காண்கின்றது.