ஹதீஸ் அட்டவணை

ஹலாலும் (ஆகுமானவை) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்திற்கும், மானத்திற்கும் பாதுகாப்பு எடுத்துக் கொண்டுவிட்டார். அதில் விழுந்தவர் ஹராத்தில் விழுந்து விட்டவராவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள். அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆட்படுத்தியது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நிச்சயமாக அல்லாஹ் சாதாரண சூழ்நிலைகளின் போது அவனது கடமைகளை பூரணமாக செய்வதை விரும்புவது போன்று அசாதாரண சூழ்நிலைகளில் அவனது சலுகைகளைப் பயன்படுத்ததுவதை விரும்புகிறான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால்;,'அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேறாதீர்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு