عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ:
«دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 7288]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்.
ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 7288]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஷரீஆ சட்ட நிலைகளின்; -தீர்ப்புகளின்- மூன்று பிரிவுகள் குறித்து குறிப்பிடுகிறார்கள்.அவை :ஏதும் கூறாது மௌனம் காத்தவை- தடைகள், கட்டளைகள் என்பவைகளாகும்.
முதலாவது :இஸ்லாமிய ஷரீஆ ஏதும் தீர்ப்புகள் சொல்லாது விட்டுவிட்டவை. அதாவது எல்லா விவகாரங்களிலும்; அடிப்படை கட்டாயம் செய்யவேண்டும் என்பது அல்ல என்ற விதியின் அடிப்படையில் அமைந்தவை. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களி;ன் காலத்தை பொறுத்தவைரை ஒரு விவகாரம் கடமையாகிவிடும் அல்லது தடுக்கப்பட்டுவிடும் என்ற இறைத் தீர்ப்பு இறங்கும் என்ற பயத்தினால் நிகழாத ஒருவிடயம் குறித்து கேள்வி கேட்காது இருப்பது அவசியம் என்ற நிலை காணப்பட்டது இவ்வாறனவை அல்லாஹ் அடியார்கள் மீது செய்த அவனின் கருணையால் விட்டுவிட்டவையாகும். ஆனால் நபியவர்களின் மரணத்தின் பின் மார்;கத்தீர்ப்பை கோரியோ அல்லது மார்க்க விவாகாரங்களில் தேவையானவற்றை கற்பிக்கும்,கற்கும் நோக்கில் கோள்விகளைக் கோட்பது அனுமதிக்கப்பட்டதும் வலிறுத்தப்பட்ட விடயமுமாகும்.இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'கேள்விகேட்பதை தவிர்த்துக்கொள்ளுதல்'; என்பதன் அர்த்தம் வலிந்து தேவையில்லாத ஒன்றை கேள்விப்கேட்பதைக்; குறிக்கும். இவ்வாறு தேவையற்ற விடயங்களை பற்றி கேள்வி கேட்பது பனூ இஸ்ராஈல்களுக்கு நடந்ததைப் போன்ற ஒரு விவகாரத்திற்கு இட்டுச்சென்றுவிடும். அவர்களுக்கு அல்லாஹ் பசுமாட்டொன்றை அறுக்குமாறு கட்டளையிட்டான் அவ்வாறு அவனின் கட்டளைக்கு அடிபணிந்து நிறைவேற்றியிருந்தால் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் இந்த விவகாரத்தை சிரமப்படுத்திக்கொள்ளவே அல்லாஹ் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினான்.
இரண்டாவது : தடைகள் . இவற்றை செய்யாது விட்டுவிட்டால் கூலியும்,செய்தால் தண்டனையும் கிடைக்கும் ஆகவே தடைகளை முழுமையாக தவிர்ந்து கொள்வது கடமையாகும்.
மூன்றாவது: கட்டளைகள் . இதனை செய்பவருக்கு கூலியும் செய்யாது விட்;டுவிட்;டவருக்கு தண்டனையும் கிடைக்கும் ஆகவே இயலுமான அளவு செய்வது கடமையாகும்.