عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله -صلى الله وعليه وسلم- قال: «لا ضَرَرَ ولا ضِرَارَ».
[صحيح] - [رواه ابن ماجه من حديث أبي سعيد الخدري -رضي الله عنه- ومن حديث عبادة بن الصامت -رضي الله عنه-. ورواه أحمد من حديث عبادة بن الصامت -رضي الله عنه-. ورواه مالك من حديث عمرو بن يحي المازني مرسلا]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: "தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது".
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

இந்த ஹதீஸ் சட்டங்கள், ஒழுக்க விதிகள் மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளில் இஸ்லாத்தின் அடிப்படை விதியைப் பிரதிபலிக்கிறது. அது தீங்குகளை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் அவர்களிடமிருந்து தடுப்பதாகும். தீங்கிழைப்பது ஹராமாகும், அதனைத் தடுப்பது அவசியமாகும், அதேநேரம் ஒரு தீங்கு மற்றொரு தீங்கினால் தடுக்கப்பட மாட்டாது. தீங்கிற்குப் பழிவாங்குவதும் ஹராமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபி (ஸல்) அவர்கள் ஒருங்கிணைந்த சொற்றொடர்கள் வழங்கப்பட்டுள்ளார்கள். அதற்கான சான்றுகள் அதிகமுள்ளன. இது அன்னாரின் தனித்துவங்களில் உள்ளதாகும்.
  2. தீங்குகள் தடுக்கப்பட வேண்டும்.
  3. செய்த தீங்கை விட அதிகமாகப் பழிதீர்ப்பது கூடாது.
  4. அல்லாஹ் தனது அடியார்களுக்குத் தீங்கிழைப்பவற்றை அவர்களுக்கு ஏவவில்லை.
  5. மறுப்பிற்குப் பயன்படுத்தும் வார்த்தை சில வேளை ஒன்றைத் தடை செய்யவும் பயன்படுத்தப்படும்.
  6. சொல், செயல், ஒன்றை விடுதல் மூலம் தீங்கிற்குப் பழிதீர்ப்பது ஹராமாகும்.
  7. இஸ்லாமிய மார்க்கம் சாந்தி, சரணடைதலின் மார்க்கமாகும்.
  8. இந்த நபிமொழி இஸ்லாமிய சட்டத்தில் ஒரு பொதுவிதியாக கணிக்கப்படுகின்றது. இஸ்லாம் தீங்கிழைப்பதை அனுமதிப்பதில்லை, தீங்கிற்குப் பழிவாங்குவதையும் தடுக்கின்றது என்பதே அந்த விதியாகும்.
  9. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் ضَرَر, ضِرار ஆகிய இரண்டும் ஒன்றா? அல்லது வேறு கருத்துக்களைக் கொண்டதா? என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இரண்டும் ஒன்றுதான், உறுதிப்படுத்தவே இரு தடவை கூறப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இரண்டும் வேறு கருத்துக்களைக் கொண்டது என்பதே பிரபலமான கருத்தாகும். அவற்றிக்கிடையான வேறுபாடுகள் பற்றிய கருத்துக்கள் வருமாறு 1. ضَرَر என்பது பெயர்ச்சொல், ضِرار என்பது தீங்கிழைக்கும் செயலைக் குறிக்கின்றது. அதாவது மார்க்கத்தில் தீங்கு என்பதில்லை, அதனைப் பிறருக்குச் செய்வதும் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். 2. ضَرَر என்பது, தான் பயனடைவதற்காகப் பிறருக்குத் தீங்கிழைத்தல். ضِرار என்பது தான் பயனடையாவிட்டாலும் பிறருக்குத் தீங்கிழைத்தல். உதாரணமாக: தனக்குப் பாதிப்பில்லாத ஒன்றை பிறருக்குத் தடுப்பதன் மூலம் அவனுக்குத் தீங்கிழைத்தல் ஆகும். இக்கருத்தை இமாம்களான இப்னு அப்தில் பர், இப்னுஸ் ஸலாஹ் போன்றோர் வலுப்படுத்தியுள்ளனர். 3. ضَرَر என்பது தனக்குத் தீங்கிழைக்காதவனக்குத் தீங்கிழைத்தல். ضِرار என்பது தனக்கு இழைத்த தீங்கிற்கு அத்துமீறிப் பழிவாங்குதலாகும். எவ்வாறாயினும் நபியவர்கள் தடுத்தது உரிமையின்றி தீங்கிழைப்பதையும், அதற்காகப் பழிவாங்குவதையும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.