عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا، فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا، فَلَا يَخْرُجَنَّ مِنَ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 362]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால், அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்.
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم - 362]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுபவருக்கு வயிற்றில் ஏதாவது ஏற்பட்டு காற்று வெளியேறியதா இல்லையா என்ற குழப்பம் -தடுமாற்றம் ஏற்பட்டால் வுழுவை முறிக்கக் கூடிய தொடக்கு ஏற்பட்டுள்ளது என உறுதியாக அறியும் வரையில் அவர் தனது தொழுகையை விட்டுவிட்டு மீண்டும் வுழு செய்வதற்காக செல்ல வேண்டாம் என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அவர் அவ்வாறு தொழுகையை முறித்துக் கொள்வதற்கு காற்றின் சப்தத்தையோ அல்லது காற்றின் நாற்றத்தையோ நுகர வேண்டும். காற்று வெளியேற வில்லை என உறுதியான நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் சந்தேகம் அவரின் உறுதியை பாதிக்கமாட்டாது. இந்த அடிப்படையில்; அவர் சுத்தமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையே முதன்மைப்படுத்தப்படும். தொடக்கு ஏற்பட்டது என்ற இடையில் ஏற்பட்ட சந்தேகமானது உறுதியற்றது என்பதனால் அதனை விட்டு விட வேண்டும்.