عَنْ أَبِي سَعِيدٍ سَعْدِ بْنِ مَالِكِ بْنِ سِنَانٍ الخُدْرِيّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ».
[حسن] - [رواه ابن ماجه، والدارقطني، وغيرهما مسندًا] - [الأربعون النووية: 32]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''.
[ஹஸனானது-சிறந்தது] - [رواه ابن ماجه والدارقطني وغيرهما مسندًا] - [الأربعون النووية - 32]
தனக்கோ பிறருக்கோ ஏற்படுகின்ற எல்லா வகையான தீங்குகளையும் அதன் வெளிப்பாடுகளையும் தடுப்பது கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கை ஏற்படுத்துவதும் கூடாது. அத்துடன் தீங்கை இன்னொரு தீங்கினால் எதிர்கொள்வதும் கூடாது. காரணம் தீங்கிழைத்தல் என்பது அதே மாதிரியான ஒன்றினால் நீங்கி விடாது. ஆனால் அத்துமீறாது பழிக்குப்பழி தண்டனை வழங்குதல் அனுமதிக்கப்பட்டதாகும்.