ஹதீஸ் அட்டவணை

'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெளியேறி விடுகின்றன''
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழுச் செய்வார்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வெரு தடவையும் கழுவுபராக இருந்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இவ்விரு முறை கழுவி வுழு செய்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால், அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஒரு முஸ்லிம் அடியான் அல்லது ஒரு விசுவாசி வுழூ செய்யும் போது அவன் தனது முகத்தைக் கழுவியதும் அந்தத் தண்ணீருடன் அல்லது இறுதித் துளி தண்ணீருடன் அவன் தன் இரு கண்களாலும் பார்த்த பாவங்கள் யாவும் வெளியேறி விடும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது