عَنْ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ رضي الله عنه:
أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غَفَرَ اللهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 164]
المزيــد ...
உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையான ஹும்ரான் அவர்கள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வுழு செய்த நிகழ்வை அறிவிக்கிறார்கள்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு 'நான் வுழூச் செய்வதைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்' என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 164]
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வுழுசெய்யும் முறையை, அழகிய முறையில் தெளிவு படுத்தும் நோக்கில் செயன்முறை ரீதியாக கற்றுக் கொடுத்தார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வரக் கூறி அதனை தனது இருகைகளிலும் மூன்று முறை ஊற்றி கழுவிவிட்டு, பின்னர் தனது வலது கையை பாத்திரத்தினுள் இட்டு நீரை எடுத்து வாயிலிட்டு நன்றாக அந்நீரை சுலட்டி, பின்னர் அதனை வெளியே கொப்பளித்ததோடு, அதே நீரால் நாசினுள் இட்டு அதனை வெளியே சிந்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின் முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவினார்கள். அதனைத் தொடர்ந்து ஈரக்கையால் தலையை ஒரு தடவை தடவினார்கள். பின்னர் கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவினார்கள்.
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழு செய்து முடிந்ததும் தான் வுழூச் செய்ததைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை தான் பார்த்ததாக அவர்களிடம் தெரிவித்தார்கள். அத்துடன் அவர்கள்; வுழு செய்ததைப் போன்று வுழுசெய்து விட்டு தனது இரட்சகனுக்கு முன் நின்று உள்ளச்சத்துடன் மெய்நிலையில் - உள்ளத்தை ஓர்நிலைப்படுத்தியவராக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால் அவரின் முழுமையான வுழுவிற்கும் தூய்மையான அவரின் தொழுகைக்கும் அல்லாஹ் அவரின் முன்சென்ற சிறுபாவங்களை மன்னித்து கூலி வழங்குகிறான் என்ற நற்செய்தியையும் குறிப்பிட்டார்கள்.