عن عثمان بن عفان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «من توضَّأ فَأَحْسَن الوُضُوءَ، خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّى تَخْرُج مِنْ تَحْتِ أَظْفَارِه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் பின் அப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யார் தொழுகைக்காக வுழுசெய்து அதனை அழகான முறையில் செய்தால் அவரது பாவங்கள் நகங்களுக்குக் கீழ் உட்பட உடலிருந்து வெளியேறி விடுகின்றன".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

வுழூ சிறந்த வணக்கங்களில் ஒன்றென்பதை இந்நபிமொழி அறிவிக்கின்றது. இதில் கூறப்பட்டுள்ள வுழூவின் சிறப்பு என்னவெனில் வுழூவை அதன் ஸுன்னாக்கள், ஒழுக்கங்களைப் பேணி அழகாகச் செய்தவருக்கு அல்லாஹ்வுடன் தொடர்பான சிறுபாவங்கள் நகத்திற்குக் கீழால் உட்பட உடம்பின் நுணுக்கமான பகுதிகளிலிருந்தும் மன்னிக்கப்படுகின்றன. இதனடிப்படையில் தான் செய்யும் வுழூவின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். "நீங்கள் தொழுகைக்காகத் தயாரானால் உங்களது முகங்களைக் கழுவிக் கொள்ளுங்கள்" (மாஇதா : 06) என்ற இறைவசனத்திற்கு வழிப்படுவதாகவும், நபி (ஸல்) அவர்களைத் தனது வுழூவில் பின்பற்றுவதாகவும் உணர்வதுடன், அதற்கான கூலியை எதிர்பார்ப்பதாகவும், அதனை முறையாக, அழகாக செய்யும் போது அதற்காகக் கூலி வழங்கப்படும் என்பதையும் உணர வேண்டும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வுழூவின் ஒழுங்குகள், நிபந்தனைகளைக் கற்பதில் கவனமெடுத்து, அதன்படி செயல்படுவதை ஊக்குவித்தல்.
  2. வுழூவின் சிறப்பை விளக்குதல், அது பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
  3. பாவங்கள் வெளியேறுவதற்கான நிபந்தனை அதனை நபியவர்கள் தனது சமூகத்திற்கு விளக்கியதைப் போன்று முறையாகச் செய்வதாகும்.
  4. வுழூவின் ஒழுங்குகள், நிபந்தனைகள், ஸுன்னாக்களைக் கற்பதில் கவனமெடுத்து, அதன்படி செயல்படுவதை ஊக்குவித்தல்.