عن بريدة بن الحصيب رضي الله عنه أنه قال:
بَكِّرُوا بِصَلَاةِ الْعَصْرِ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَكَ صَلَاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ».

[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 553]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா இப்னுல் ஹஸீப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
அஸ்ர் தொழுகையை நேர காலத்துடன் நிறைவேற்றுங்கள், ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறானோ அவனின் நற்செயல்கள் அழிந்து விடும்'.

[சரியானது] - [இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்] - [புஹாரி - 553]

விளக்கம்

அஸ்ர் தொழுகையை வேண்டுமென்றே அதற்குரிய நேரத்தை தவிர்த்து பிற்படுத்தி தொழுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். அவ்வாறு பிற்படுத்தித்தியவரின் செயல் வீணாகி விடுவதோடு அது எவ்விதப் பெறுமானமுமற்றதாக ஆகிவிடுகிறது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அஸ்ர் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் பேணித் தொழுவதற்கு ஆர்வமூட்டபட்டுள்ளதுடன் அதற்காக விரைந்து செயற்படுதல் வேண்டும்.
  2. அஸ்ர் தொழுகையை தொழாது அதற்குரிய நேரத்தை தவறவிடுவது ஏனைய தொழுகைகளை விட்டுவிடுவதை விட மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது நடுத்தொழுகை என்று குறிப்பிடப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என கட்டளைப் பிரப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அல்லாஹ்: தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிடுகிறான். (பகரா : 238).
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (62)
மேலதிக விபரங்களுக்கு