عَنْ أَنَسٍ رَضيَ اللهُ عنه قَالَ:
كَانَتْ عَامَّةُ وَصِيَّةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ حَضَرَهُ الْمَوْتُ: «الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ، الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ»، حَتَّى جَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُغَرْغِرُ بِهَا صَدْرُهُ، وَمَا يَكَادُ يُفِيضُ بِهَا لِسَانُهُ.
[صحيح] - [رواه النسائي في السنن الكبرى وابن ماجه] - [مسند أحمد: 12169]
المزيــد ...
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபியவர்கள் மரண தருவாயை அடைந்த போது, அவர்களது பெரும்பாலான வஸிய்யத் 'தொழகையையும், உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவையையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள், 'தொழகையையும், உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவையையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்,' என்றே காணப்பட்டது. எந்தளவுக்கென்றால், உயிர் பிரிய அண்மித்து, அவர்களால் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ள முடியாத நிலையிலும் அதையே கூறிக் கொண்டிருந்தார்கள்.
[சரியானது] - [குப்ரா எனும் நூலில் இமாம் நஸாஈயும், இமாம் இப்னுமாஜாவும் இதை பதிவு செய்துள்ளனர்] - [முஸ்னத் அஹ்மத் - 12169]
நபி (ஸல்) அவர்கள் தமது மரண தருவாயில் இருக்கும் வேளைகளில் தமது உம்மத்திற்காக அதிகம் செய்த வஸிய்யத்தாக பின்வரும் விடயங்களே காணப்பட்டன: "தொழுகையைப் பற்றிக் கொள்ளுங்கள். அதனைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றில் பராமுகமாக இருந்து விடாதீர்கள். இதேபோன்று, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட, ஆண், பெண் அடிமைகளது கடமைகளை சரியாக நிறைவேற்றி, அவர்களை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்." இவ்வாறே, உயிர் பிரிய அண்மித்து, அவர்களால் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ள முடியாத நிலையிலும் அதையே கூறிக் கொண்டிருந்தார்கள்.