عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ عِمْرَانُ: لاَ أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلاَثَةً، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَنْذِرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2651]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
உங்களில் சிறந்தவர்கள் எனது காலகட்டத்தைச் சேர்ந்தவர்களே! பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள், பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள். இம்ரான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்னர் இரு தலைமுறையினரையா அல்லது மூன்று தலைமுறையினரையா கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டடேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களுக்குப் பின்னர் சில மக்கள் வருவார்கள். அவர்கள் துரோகம் செய்வார்கள். நம்பப்படமாட்டார்கள். சாட்சியம் அளிப்பார்கள். ஆனால், சாட்சியம் அளிக்க அழைக்கப்பட மாட்டார்கள். நேர்ச்சை வைப்பார்கள். ஆனால், நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடம் கொழுப்பு வெளிப்படும்."

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 2651]

விளக்கம்

இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, ஒரேகாலத்தில் ஒன்றுசேரும் மக்கள் தலைமுறையினரில், நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் வாழ்ந்த தலைமுறையினரே சிறந்த தலைமுறையாகும். பின்பு அவர்களை அடுத்து வரும், நபித்தோழர்களது காலத்தை அடைந்த, நபி (ஸல்) அவர்களது காலத்தை அடையாத முஃமின்கள் வருவார்கள். பின்பு அவர்களை அடுத்தவர்கள் வருவார்கள். அவர்கள் தாம், அத்பாஉத் தாபிஈன்களாகும். அவர்களையும் அடுத்து, நான்காவது தலைமுறையாக வருபவர்களைப் பற்றி நபியவர்கள் கூறினார்களா என்ற விடயத்தில் அந்த நபித்தோழர் உறுதியற்றவராகக் காணப்பட்டார். பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : அவர்களுக்குப் பின்னர் சில மக்கள் வருவார்கள். அவர்கள் துரோகம் செய்வார்கள். மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள். சாட்சியம் அளிக்க அழைக்கப்பட முன்னரே, சாட்சியம் அளிப்பார்கள். நேர்ச்சை வைப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் கொழுப்பு வெளிப்படும் அளவு அதிகமாக உண்ணவும், பருகவும் செய்வார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இவ்வுலகம் நிலைத்திருக்கும் காலங்களிலேயே தோன்றிய மிகச் சிறந்த தலைமுறை, நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் வாழ்ந்த காலத்தில் இருந்த தலைமுறையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஸஹீஹுல் புகாரியில் இவ்வாறு வந்துள்ளது: ஆதமின் மக்களில் (மனிதர்களில்) தலைமுறை தலைமுறையாக நான் சிறந்த தலைமுறை வழியே, நான் தோன்றியிருக்கும் (இந்தச்) சிறந்த தலை முறையில் தோன்றி இறைத்தூதராக்கப்பட்டுள்ளேன்.
  2. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸ், நபித்தோழர்கள் தாபிஈன்களை விடச் சிறந்தவர்கள் என்பதாகவும், தாபிஈன்கள் அத்பாஉத் தாபிஈன்களை விடச் சிறந்தவர்கள் என்பதாகவும் உணர்த்தி நிற்கின்றது. எனினும், இந்த சிறப்புநிலை என்பது, மொத்தமாகப் பார்க்கும் போதா? அல்லது ஒவ்வொரு தனிநபரையும் உள்ளடக்குமா? இது ஆய்வுக்குரியது. பெரும்பாலான அறிஞர்கள் இரண்டாவதையே சரிகாண்கின்றனர்.
  3. ஆரம்ப மூன்று தலைமுறையினதும் வழிமுறையைப் பின்பற்றல் அவசியம் என்பதை சுட்டிக் காட்டல். நபித்துவத்தின் காலத்தோடு யாரது காலம் நெருக்கமாக உள்ளதோ, அவர்களே அறிவும், சிறப்பும், நபியவர்களது வழிமுறையைப் பின்பற்றும் தன்மையையும் பெற மிகத் தகுதியானவர்களாகும்.
  4. நேர்ச்சை என்பது, ஒரு விசுவாசி, மார்க்கம் அவனுக்குக் கடமையாக்காத ஒரு வணக்கத்தை, தனது வாயால் கூறித் தனக்குத் தானே கடமையாக்கிக் கொள்வதாகும்.
  5. துரோகம், நேர்ச்சையை நிறைவேற்றாமை, உலக மோகம் என்பவற்றைக் கண்டித்தல்.
  6. ஓர் உரிமைக்கு சொந்தக்காரர், அறிந்திருந்தும் சாட்சியத்திற்கு அழைக்காத பட்சத்தில் சாட்சியம் கூறுவது கண்டிக்கப்படும் ஒன்றாகும். ஆனால், அவர் அறியாமல் இருக்கும் பட்சத்தில், நபி (ஸல்) அவர்கள் கூறிய, பின்வரும் கூற்றில் அது நுழையும் : "சாட்சியம் அளிப்பவர்களில் மிகச் சிறந்தவர்களை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? அவர்தான், தன்னிடம் கேட்கப்பட முன்னரே சாட்சியம் அளிப்பவர்." (ஆதாரம் : முஸ்லிம்)
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு இந்தோனேஷியன் வங்காள மொழி மேலதிக விபரங்களுக்கு (35)
மேலதிக விபரங்களுக்கு