عَنْ أَبِي نَجِيحٍ العِرْبَاضِ بْنِ سَارِيَةَ رضي الله عنه قَالَ: وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً وَجِلَتْ مِنْهَا القُلُوبُ، وَذَرَفَتْ مِنْهَا العُيُونُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ! كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ؛ فَأَوْصِنَا، قَالَ:
«أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ تَأَمَّرَ عَلَيْكُمْ عَبْدٌ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الخُلَفَاءِ الرَّاشِدِينَ المَهْدِيينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ؛ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ».
[صحيح] - [رواه أبو داود والترمذي] - [الأربعون النووية: 28]
المزيــد ...
அபூ நஜீஹ் இர்பாழ் இப்னு சாரியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் பிரசங்கமொன்றை நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களது இதயங்கள் நடுங்கின. எங்களது கண்களில் கண்ணீர் சிந்தின. நாங்கள், 'அல்லாஹ்வின் தூதரவர்களே, இது பிரியாவிடை கூறுபவர்களின் அறிவுரை போன்றல்லவா இருக்கிறது! ஆகவே எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறினோம். பெருமனார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றார்கள் :
இறையச்சத்தையும், ஒரு அடிமையே உங்களது தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்படுவதையும் நான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன். நிச்சயமாக உங்களில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் அதிக கருத்துவேறுபாடுகளை சந்திப்பீர்கள். ஆகவே நீங்கள் என்னுடைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள்.அதுபோலவே நல்வழிநடந்த கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள். உறுதியுடன் அவற்றை கடைப்பிடித்து ஓழுகுங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படுபவைகள் (பித்அத்துக்கள்) குறித்து கவனமாக இருங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்டவைகள் அனைத்தும் நூதன கிரியைகளாகும். ஒவ்வொரு நூதன கிரியையும் வழிகேடாகும்'.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه أبو داود والترمذي] - [الأربعون النووية - 28]
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஒரு உபதேசத்தை செய்தார்கள். அவ்வுபதேசத்தின் கனதியை அவதானித்த தோழர்கள்; 'அல்லாஹ்வின் தூதரே! இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, உங்களுக்குப் பின் கடைப்பிடித்தொழுகும் படியான அறிவுரையை எங்களுக்கு கூறுங்கள்' என்றார்கள். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ் விதித்த கடமைகளை செய்வதன் மூலமும் தடுத்தவிடயங்களை விலகி நடப்பதன் மூலமும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறேன் என்றார்கள். மேலும் தலைவர்களுக்கு செவிசாய்த்து கட்டுப்பட்டு நடக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். உங்களுக்கு ஓர் அடிமை தலைவராக நியமிக்கப்பட்டாலும், அல்லது அதிகாரத்தை பொறுப்பேற்றாலும், அதாவது உங்களில் அந்தஸ்தில் குறைந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டாலும், குழப்பங்கள் ஏற்படுவதைப் பயந்து அவரை புறக்கணிக்காது அவருக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களில் எனக்குப்பின் வாழ்வோர் அதிகமான கருத்து முரண்பாடுகளை –பிரச்சினைகளை –கண்டுகொள்வார். பின்னர் இந்த முரண்பாடுகளிலிருந்து தப்பிக்கும் வழியை தெளிவுபடுத்துகிறார்கள். அதுவே அவர்களினதும் அவர்களுக்கு பிறகு வந்த நேர்வழி நடந்த கலீபாக்களான அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்றோரினது வழிமுறையை பின்பற்றுவதாகும். அதனைப் பின்பற்றி அதில் உறுதியாக இருப்பதுமாகும். மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படுகின்ற நூதன விடயங்களை விட்டும் அவர்களை எச்சரிப்பதோடு அனைத்து பித்அத்துக்களும் வழிகேடு என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.