عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ: {وَأَقِمِ الصَّلاةَ لِذِكْرِي} [طه: 14]».

[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
((யார் ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்ற மறந்துவிடுகிறாரோ அவர் அதனை ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும்; அதற்கான குற்றப்பரிகாரம் அதனைத்தவிர வேறுஒன்றுமில்லை (என்னை நினைவு படுத்த தொழுகையை நிலைநாட்டுவீராக,) (தாஹா :14)

ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடமையான எந்த தொழுகையாயினும் அதன் நேரம் கடந்த பின்னும் நிறைவேற்ற மறந்து விட்டால்,அவருக்கு ஞாபகம் வரும் வேளை உடன் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.அதனை விட்டதனால் ஏற்றபட்ட பாவத்தை நீக்குவதற்கும் மறைப்பதற்குமான வழி அது நி;னைவுக்கு வந்த காலை அதனை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழி கிடையாது. அல்லாஹ் தனது திருமறையில் ' என்னை நினைவுபடுத்துவதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக எனக் குறிப்பிடுகிறான்' இதன் கருத்து: நீ நிறைவேற்ற மறந்த தொழுகையை ஞாபகம் வரும்போது அதனை நிறைவேற்றுவீராக என்பதாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதனை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதிலும் மறதி போன்ற தக்க காரணம் நிமித்தம் நேரம் கடந்து நிறைவேற்றுவதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது எனபதை தெளிவுபடுத்தல்.
  2. நியாயமான காரணங்கள் இன்றி தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துவது கூடாது
  3. .
  4. தொழுகையை நிறைவேற்ற மறந்தவர் தமக்கு ஞாபகம் வந்த வேளையிலும் தூங்கியவர் எழுந்ததும் தொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும்.
  5. தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாயினும் கழாத் தொழுகைகளை விரைந்து உடன் நிறைவேற்றுவது கடமையாகும்.