عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ رضي الله عنه:
أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ أَرَادَ بِنَاءَ الْمَسْجِدِ فَكَرِهَ النَّاسُ ذَلِكَ، وَأَحَبُّوا أَنْ يَدَعَهُ عَلَى هَيْئَتِهِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَنَى مَسْجِدًا لِلهِ بَنَى اللهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 533]
المزيــد ...
மஹ்மூத் இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியை –மஸ்ஜிதுன் நபவியை- மீள் நிர்மாணிக்க –புணரமைக்க- நாடியபோது அதனை மக்கள் விரும்பவில்லை, அதனை நபியவர்களின் காலத்தில் இருந்த அமைப்பில் இருப்பதை விரும்பினார்கள். அப்போது அவர்கள் 'யார் அல்லாஹ்வுக்காக பள்ளியை கட்டுகிறாரோ அதனைப்போன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அவனுக்காக கட்டுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாகக் கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 533]
உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதுன் நபவியை முன்பிருந்ததை விட மிக அழகிய தோற்றத்தில் புணர்நிர்மானம் செய்ய விரும்பினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் இருந்த கட்டடத்தின் தோற்றம் மாறிவிடும் என்பதனால் மக்கள் இதனை விரும்பவில்லை. மஸ்ஜிதுன் நபவியானது களிமண்ணால் கட்டப்பட்டு ஈத்தம் ஒழைகளால் வேயப் பட்டிருந்தது. இதனை மாற்றியமைத்து கல் மற்றும் சுன்னாம்பினால் அதனை நிர்மாணிக்க உஸ்மான் ரழியல்லாஹு அவர்கள் விரும்பினார். அவ்வேளை உஸ்மான் ரழியல்லாஹு அவர்கள் மக்களிடம் தான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதாக பின்வரும் இந்த செய்தியை குறிப்பிட்டார்கள் : யார் ஒருவர் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் வேண்டி முகஸ்துதி பிறர் புகழ் நாடாது இறையில்லத்தை நிர்மாணிக்கிறாரோ அவருக்கு அதையொத்த கூலியான சுவர்க்கத்தில் அவருக்கென அதே மாதிரியான ஒன்றை நிர்மாணிக்கிறான் என்றார்கள்.