عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 444]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூகதாதா அஸ்ஸுலமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
''உங்களில் ஒருவர் பள்ளிக்குச்சென்றால் அவர் உட்கார முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்''.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 444]
யாராவது ஒருவர் பள்ளிக்குள் எந்த நேரத்திலேனும் வந்தாலும் அல்லது எந்த நோக்கத்திற்கு வந்தாலும் அவர் அமரும் முன் பள்ளியின் காணிக்கை தொழுகை 'தஹிய்யதுல் மஸ்ஜித்' இரண்டு ரக்அத்துக்களை தொழுது கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் வலியுறுத்தியுள்ளார்கள்.