عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلَاةِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 433]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்:
'(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேயே தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 433]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூட்டாகத் தொழக்கூடியவர்களுக்கு தங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுமாறு பணிப்பார்கள். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை முந்தி நிற்காது அணியைச் சீர் செய்து கொள்ளுமாறும் பணிப்பார்கள். மேலும்; அணியை சீர் செய்து கொள்வதில் தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது. அணி வளைந்து கோணலாக இருப்பது தொழுகையில் ஒரு வகை முறைகேட்டையும் குறையையும் ஏற்படுத்திவிடும். .