عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أَمَا يَخْشَى أَحَدُكُمْ - أَوْ: لاَ يَخْشَى أَحَدُكُمْ - إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ، أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ، أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 691]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
(தொழுகை நடத்தும்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் தன் தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவிடுவதை அல்லது அவரின் தோற்றத்தை கழுதையின் தோற்றமாக மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 691]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமுக்கும் முன் முந்தி செல்பவருக்கு கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்கிறார்கள். அவ்வாறு நடந்து கொள்பவரின் தலை கழுதையின் தலையாக அல்லது அவரின் வடிவத்தை கழுதையின் வடிவமாக அல்லாஹ் மாற்றிடுவான் என்பதே அந்த கடுமையான எச்சரிகை.