عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ:
أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا». قَالَ: لاَ شَيْءَ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ». قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بِشَيْءٍ، فَرِحْنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3688]
المزيــد ...
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை'. எனினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உமர் (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 3688]
பாலை வனத்தில் வசிக்கும் ஒரு நாட்டுப்புற அரபி நபியவர்களிடம் வந்து மறுமை நாள் நிகழும் நேரம் குறித்து வினவினார்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம் நீ அதற்காக நல்லமல்களில் எவற்றை தயார்செய்து வைத்துள்ளாய்? என்று கேட்டார்கள்.
கேள்வி கேட்டவர் நான் அதற்கென பெரிதாக எந்தவொரு நற்காரியத்தையும் செய்யவில்லை என்றாலும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உளமாற தான் நேசிப்பதாக கூறினார். இது தவிர உளரீதியான, உடல் ரீதியான மற்றும் செல்வ ரீதியான எந்த ஒரு வணக்கத்தையும் அவர் குறிப்பிடவில்லை. ஏனெனில் இவையெல்லாம் அடிப்படையான நேசத்தின் விளைவாக வருபவை. அத்துடன் உண்மையான நேசமானது நல்லமல்களின் பால் முயற்சிப்பதை தூண்டக் கூடியதாக இருக்கும்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் சுவர்க்கத்தில் இருப்பாய் என்று கூறினார்கள்.
இந்த நன்மாரயத்தின் (நற்செய்தி) மூலம் ஸஹாபாக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
தொடர்ந்தும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகையில், தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் அபூபக்ர் உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரையும் நேசிக்கிறேன். தனது அமல்கள் அவர்களின் அமல்களின் அளவுக்கு இல்லையென்றிருந்தாலும் அவர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்றார்கள்.