عَنْ أَبِي قَتَادَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يُمْسِكَنَّ أَحَدُكُمْ ذَكَرَهُ بِيَمِينِهِ وَهُوَ يَبُولُ، وَلَا يَتَمَسَّحْ مِنَ الْخَلَاءِ بِيَمِينِهِ، وَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 267]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
((உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, மறை உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.))
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 267]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் சில ஒழுக்கங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது தனது மறையுறுப்பை வலது கையால் பிடிப்பதையும்,முன்பின் துவாரங்களில் உள்ள அசுத்தத்தை வலது கையினால் நீக்குவதையும் தடை செய்துள்ளார்கள்.ஏனெனில்; வலது கை நல்ல விடயங்களில் பயன்படுத்துவதற்குரறியது என்பதினாலாகும். அதே போன்று குடிக்கும் பாத்திரத்தினுள் மூச்சு விடுவதையும் தடைசெய்துள்ளார்கள்