ஹதீஸ் அட்டவணை

நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அதன் காரணமாகத் தான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
((நீங்கள் மலம் கழிக்கச் சென்றால், கிப்லா (கஃபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
((உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, மறை உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.))
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸி' எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். பொருள்: யா அல்லாஹ்! உன்னிடம் ஷைத்தான்களில் ஆண் மற்றும் பெண்ணகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது