عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «اسْتَنْزِهوا من البول؛ فإنَّ عامَّة عذاب القبر منه».
[صحيح] - [رواه الدارقطني]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் : "நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அதன் காரணமாகத் தான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்

விளக்கம்

கப்ரில் இருக்கும் வேதனைக்கான காரணங்களில் ஒன்றை நபியவர்கள் எமக்கு விளக்குகின்றார்கள். அதுதான் பரவலாக உள்ள ஒரு விடயமாகும். அது சிறுநீர் கழித்ததும் முறையாக சுத்தம் செய்யாமையாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. சிறுநீர் கழிக்கும் போது தனது உடல், உடையில் பட்டுவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
  2. அவ்வாறு பட்டாலும் அசுத்தமாகாமல் இருப்பதற்காக, பட்ட இடத்தை உடனடியாக கழுவிக் கொள்வது மிகச் சிறந்தது, தொழுகைக்குச் செல்லும் போதே சுத்தம் செய்வது கடமையாகின்றது.
  3. சிறுநீர் அசுத்தமானதாகும். உடலிலோ, உடையிலோ, இடத்திலோ பட்டால் அவ்விடம் அசுத்தமாகிவிடும், அதனுடன் தொழுகை செல்லுபடியாக மாட்டாது. ஏனெனில் அசுத்தங்களை நீக்குவது தொழுகையின் நிபந்தனைகளில் உள்ளவையாகும்.
  4. சிறுநீரிலிருந்து சுத்தமாகாமலிருப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்.
  5. கப்ரில் வேதனை உண்டு, இது அல்குர்ஆன், ஸுன்னா, அறிஞர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உறுதியான விடயமாகும்.
  6. மறுமையில் கூலி வழங்கல் உண்டு. மறுமையின் முதற்படி கப்ருகளாகும். அவை ஒன்றோ சுவனப் பூஞ்சோலையாக அல்லது நரகின் படுகுழியாக இருக்கும்.
மேலதிக விபரங்களுக்கு