عن علي بن أبي طالب، ومعاذ بن جبل رضي الله عنهما مرفوعًا: «إذا أتى أحدُكم الصلاةَ والإمامُ على حال، فلْيصنعْ كما يصنع الإمامُ».
[صحيح] - [رواه الترمذي]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ பின் அபீதாலிப் (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கூறுகின்றனர் : "இமாம் தொழுகையில் ஒரு நிலையில்இருக்கும்போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்யட்டும்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]
இமாம் நிலை, ருகூஃ, ஸுஜூது, இருப்பு எந்த நிலையில் இருக்கும் போது வந்தாலும் அதே நிலையில் இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். சில பாமரர்கள் செய்வது போல் இமாம் நிலைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.