عن عبد الله بن مسعود رضي الله عنه قال: علمنا رسول الله صلى الله عليه وسلم خطبة الحاجة: إن الحمد لله، نستعينه ونستغفره، ونعوذ به من شرور أنفسنا، من يهد الله، فلا مضل له، ومن يضلل، فلا هادي له، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله، " يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ والأرحام إن الله كان عليكم رقيبا} [النساء: 1] ، {يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون} [آل عمران: 102] ، {يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا (70) يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما} [الأحزاب:70 - 71].
[صحيح] - [رواه أبو داود والترمذي وابن ماجه والنسائي وأحمد]
المزيــد ...

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நிக்காஹ்) குத்பாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள் : "இன்னல் ஹம்த லில்லாஹ், நஸ்தஈனுஹூ வனஸ்தஃபிருஹூ, வனஊது பிஹீ மின் ஷுரூரி அன்புஸினா, மன் யஹ்தில்லாஹு பலா முழில்ல லஹூ, வமன் யுழ்லில் பலா ஹாதிய லஹூ, வஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'' (பொருள் : நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! நாம் அவனைப் புகழ்கிறோம். மேலும் அவனிடமே உதவி தேடுகிறோம். இன்னும் அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். இன்னும் நமது உள்ளங்களில் தோன்றும் தீய எண்ணங்களைவிட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழிப்படுத்தி விட்டானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் யாரை வழி கெடுத்து விட்டானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது நல்லடியாரும் தூதரும் ஆவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள்பின்வரும் மூன்று வசனங்களை ஓதுவார்கள் : "மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்" (நிஸா : 01), "நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்" (ஆல இம்ரான் : 102), "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள், (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்" (அஹ்ஸாப் : 70, 71).
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ்வின் புகழாரங்கள், அவனிடம் உதவி கோரல், கெடுதிகளைவிட்டும் பாதுகாப்புத் தேடி அவனிடம் ஒதுங்குதல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியுள்ள இந்த குத்பா, மற்றும் மேற்கண்ட மூன்று வசனங்களையும் ஓத வேண்டும் என்பதை இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் இந்நபிமொழி உணர்த்துகின்றது. அல்குர்ஆன், ஸுன்னா, மார்க்க சட்டக்கலை வகுப்புக்கள் ஆரம்பிக்கும் போது, மற்றும் மக்களுக்கு உபதேசிக்கும் போது இதனை ஓத வேண்டும், இது திருமணத்தின் மாத்திரம் ஓதுவதற்குக் குறிப்பானதல்ல. பரகத் கிடைப்பதற்காகவும், நல்ல பலாபலன் கிடைப்பதற்காகவும் அனைத்து விஷேடங்களின் போதும் ஓத வேண்டும். இது வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னாவாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. முக்கிய நிகழ்வுகளை இந்த குத்பாவின் (பிரசங்கம்) மூலம் ஆரம்பிப்பது விரும்பத்தக்கது, ஏனெனில் இந்த திக்ரின் பரகத்தினால் அந்தக் காரியம் வெற்றியளிக்கும்.
  2. குத்பா அல்லாஹ்வின் புகழாரம், இரு சாட்சியங்கள், சில இறைவசனங்களை உள்ளடக்கியிருப்பது அவசியமாகும்.
  3. இந்த நபிமொழி ஒரு குத்பா (பிரசங்கம்) ஆகும், இதற்கு குத்பா ஹாஜா (நிகழ்வுகளின் போது ஓதப்படும் குத்பா) எனப்படுகின்றது. அல்குர்ஆன், ஸுன்னா, மார்க்க சட்டக்கலை வகுப்புக்கள் ஆரம்பிக்கும் போது, மற்றும் மக்களுக்கு உபதேசிக்கும் போது இதனை ஓத வேண்டும், இது திருமணத்தின் மாத்திரம் ஓதுவதற்குக் குறிப்பானதல்ல. மாறாக அனைத்து நிகழ்வுக்குமான குத்பாவாகும். திருமணமும் அதில் ஒன்றாகும்.
  4. அல்லாஹ்வுக்குரிய புகழாரங்கள், அதற்குத் தகுதியுடையவன், அதன் பண்புகளைத் தன்னகத்தே கொண்டவன் போன்றவற்றை இந்நபிமொழி உள்ளடக்கியுள்ளது.
  5. தான் ஒரு விடயத்தை முன்னெடுக்கும் போது அது இலகுவாக நடந்தேறவும், வெற்றிகரமாக நிறைவேறவும் அல்லாஹ்விடம் உதவி தேடுவதும் இந்நபிமொழியில் உள்ளது. குறிப்பாக திருமணம் மற்றும் அதன் செலவீனங்களில் உதவி தேடுதல்.
  6. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரல், குற்றங் குறைகளை மறைக்க வேண்டுதல், எமது இயலாமை , அலட்சியங்களை ஏற்று, அவற்றை மன்னிக்குமாறு அவனிடம் வேண்டுதல் போன்றனவும் இந்நபிமொழியில் உள்ளது.
  7. அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர ஹராமானவற்றை செய்யவும், கடமைகளை விடவும் போராடும் தீயவற்றைத் தூண்டக்கூடிய ஆன்மாவின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதையும் இந்நபிமொழி உள்ளடக்கியுள்ளது.
  8. அல்லாஹ்தான் தனது படைப்பினங்களில் முழு அதிகாரமுள்ளவன், உள்ளங்களின் நேர்வழியும், வழிகேடும் அவனது கையிலேயே உள்ளது என்பதையும் இந்நபிமொழி உள்ளடக்கியுள்ளது.
  9. இஸ்லாத்தின் திறவுகோலான இரு சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதையும் இந்நபிமொழி பொதிந்துள்ளது, அவ்விரண்டும்தான் இஸ்லாத்தின் அடிப்படை, அஸ்திவாரமாகும். உள்ளத்தால் அவ்விரண்டையும் முழுமையாக ஏற்காமல் ஒரு மனிதன் முஸ்லிமாக முடியாது.