عَنْ أَبِي حُمَيْدٍ أَوْ عَنْ أَبِي أُسَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 713]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுமைத் அல்லது அபூ உஸைத் அறிவிக்கிறார்:
உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 713]
மஸ்ஜிதிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஓத வேண்டிய துஆவை தனது சமூகத்திற்கு கற்றுக்கொடுத்து வழிப்படுத்தினார்கள். பள்ளியினுள் நுழையும் போது அல்லாஹும்மப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் கருணையை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை தயார்படுத்தித் தருமாறு அல்லாஹ்விடம் அடியான் வேண்டுகிறான். மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்ற துஆவை ஓத வேண்டும். இதன் கருத்து அடியான் ஹலாலான வாழ்வாதாரத்தை அல்லாஹ்வின் அருட்கொடையிலிருந்து தருமாறு வேண்டுகிறான்.