عن عبدالله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: «ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام» يعني أيام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: «ولا الجهاد في سبيل الله، إلا رجل خرج بنفسه وماله، فلم يَرْجِعْ من ذلك بشيء»
[صحيح] - [رواه البخاري، وهذا لفظ أبي داود وغيره]
المزيــد ...

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''(துல்ஹஜ்) பத்து நாள்களாகிய இத்தினங்களை விட வேறு எந்தத் தினத்தில் செய்யக் கூடிய நற்செயல்களும் அல்லாஹ்விற்கு மிக விருப்பானதல்ல'' என்று நபி (ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என பதிலளித்தார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

'(துல்ஹஜ்) பத்து நாள்களாகிய இத்தினங்களை விட வேறு எந்தத் தினத்தில் செய்யக் கூடிய நற்செயல்களும் அல்லாஹ்விற்கு விருப்பானதல்ல'' என்று நபி (ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என பதிலளித்தார்கள். இங்கு நற்செயல்கள் என்பது தொழுகை, தர்மம், நோன்பு, திக்ரு, தக்பீர், அல்குர்ஆன் ஓதல், பெற்றோருக்கு உபகாரம் செய்தல், உறவைப் பேணுதல், படைப்பினங்களுக்கு நலவு நாடுதல், அயலவர்களுடன் அழகிய முறையில் நடத்தல் போன்ற அனைத்து நற்செயல்களையும் உள்ளடக்குகின்றது. துல்ஹஜ் பத்தாம் நாள் நோன்பிருக்கத் தடையுள்ளதால் ஏனைய ஒன்பது தினங்களிலும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கது. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களில் நற்செயல்கள் செய்வதன் சிறப்பு, அறப்போர் மிகச் சிறந்த அமல்களில் ஒன்று என்பதற்கும் இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது. அதனால்தான் தோழர்கள் 'ஜிஹாதை விடவுமா?' என வினவினார்கள். ஒருவர் தனது உயிரையும் ஆயுதம், பயணிக்கும் வாகனம் போன்ற தனது பொருட்களையும் எடுத்துக் கொண்டு சென்று குறித்த நபரும் கொல்லப்பட்டு, அவரது பொருட்களும் எதிரிகளால் சூரையாடப்படும் இது போன்ற அரிதான நிலையின் சிறப்பும் இந்நபிமொழியில் விளக்கப்பட்டுள்ளது. தனது உயிர், பொருள் இரண்டையும் இறைப்பாதையில் இழந்ததால் இவர் சிறந்த போராளிகளில் ஒருவராகக் கருதப்படுகின்றார், இவருடைய இச்செயல் குறித்த அந்த பத்து நாட்களில் செய்கின்ற நற்செயல்களை விடச் சிறந்தது. இதுவே துல்ஹஜ் முதல் பத்து நாட்களுள் நடந்தால் அதன் சிறப்பு இன்னும் பன்மடங்காகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வருடத்தின் ஏனைய நாட்களை விட துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களின் சிறப்பு தெளிவாகிறது.
  2. துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் நோன்பு நோற்பது விரும்பத்தக்கது.
  3. இஸ்லாத்தில் அறப்போரின் சிறப்பு புனிதமானது.
  4. காலங்களில் சிலதை விட சிலதிற்கு சிறப்புக்கள் உண்டு.
  5. உபதேசம் கேட்போர் தமக்கு ஏற்படும் சிக்கல்களை கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு