عَن سَهْلِ بْنِ حُنَيْفٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ سَأَلَ اللهَ الشَّهَادَةَ بِصِدْقٍ بَلَّغَهُ اللهُ مَنَازِلَ الشُّهَدَاءِ، وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1909]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"உண்மையாகவே அல்லாஹ்விடம் வீரமரணத்தை வேண்டுபவர் தனது படுக்கையில் மரணித்தாலும் உயிர்த்தியாகிகளின் அந்தஸ்துக்களை அடையச் செய்வான்".
'யார் அல்லாஹ்விடம் உண்மையாகவே ஷஹாதத்தை (வீரமரணத்தைக்) கேட்கிறாரோ, அவர் தனது படுக்கையில் இறந்தாலும், அல்லாஹ் அவரை தியாகிகளின் (இறைபாதையில் வீரமரணம் அடைந்தோர்) தரத்திற்கு உயர்த்துவான்.'
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 1909]
அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்டு ஷஹாதத்தை –வீரமரணம் அடைவதை அல்லாஹ்விடம் கேட்பவர், அவரது நிய்யத்தில் -எண்ணத்தில்- அல்லாஹ்வுக்காக எனும் உளப்பரிசுத்ததோடு உண்மையாளராகவும் இருந்தால் அவரின் உண்மையான –தூய்மையான நிய்யத்தின் காரணமாக அவர் (ஜிஹாத்) அறப்போரில் அல்லாது தனது படுக்கையில் மரணித்தாலும் அறப்போரில் வீரமரணமடைந்தோரின் அந்தஸ்த்தைப் பெறுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.