عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا يَزَالُ البَلاَءُ بِالمُؤْمِنِ وَالمُؤْمِنَةِ فِي نَفْسِهِ وَوَلَدِهِ وَمَالِهِ حَتَّى يَلْقَى اللَّهَ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ».
[حسن] - [رواه الترمذي وأحمد] - [سنن الترمذي: 2399]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'எந்தப் பாவமும் இல்லாத நிலையில் (பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்)அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை, முஃமினான ஆணும், பெண்ணும் தங்கள் சுய வாழ்விலும், தங்கள் குழந்தைகளிலும், செல்வத்திலும் சோதனைகளை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.'
[ஹஸனானது-சிறந்தது] - [رواه الترمذي وأحمد] - [سنن الترمذي - 2399]
ஒரு நம்பிக்கை கொண்ட ஆணோ, அல்லது பெண்ணோ சோதனைகளுக்கு ஆட்படாமல் ஒரு போதும் இருக்கமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சோதனையானது ஒரு முஃமினின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகக் காணப்படும். உதாரணமாக அவரது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சார்ந்ததாக இருக்கும். சில நேரங்களில் சோதனையானது குழந்தைகளுடன் தொடர்புடையதாக காணப்படும், உதாரணமாக பிள்ளைகள் நோய்வாயப்டுதல், இறந்து போதல் அல்லது கீழ்படியாது நடத்தல், நோவினை செய்தல் போன்றவைகளை குறிப்பிடலாம். சில நேரங்களில் சோதனை செல்வத்துடன் தொடர்பானதாக இருக்க முடியும். உதாரணமாக வறுமையை எதிர்கொள்ளுதல், வியாபாரம் முழுமையாக நஷ்டம்அடைதல், செல்வம் திருடப்படுதல், பொருளாதார மந்தநிலை, நெருக்கடியை எதிர்கொள்ளல் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த சோதனைகளின் விளைவாக, அல்லாஹ் அடியானின் அனைத்து பாவங்களையும் அழித்து விடுகிறான், இறுதியாக அவன் அல்லாஹ்வைச் சந்திக்கும் போது, அவன் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் அவன் தூய்மையடைகிறான்.