عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: "إن عِظَمَ الجزاءِ مع عِظَمِ البلاءِ، وإن الله تعالى إذا أحب قوما ابتلاهم، فمن رَضِيَ فله الرِضا، ومن سَخِطَ فله السُّخْطُ".
[صحيح] - [رواه الترمذي وابن ماجه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "சோதனையின் பரப்புக்கேற்ப்பவே கூலியின் பரப்பும் இருக்கும். அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான், அதனைப் பொருந்திக் கொண்டவருக்குப் பொருத்தமுள்ளது, கோபித்தவருக்குக் கோபமுள்ளது".
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஒரு விசுவாசிக்கு தனது உயிர், பொருளில் சிலவேளை சோதனைகள் ஏற்படலாம், அதன்போது பொறுமையாக இருந்தால் அதற்காக அல்லாஹ் அவருக்குக் கூலி வழங்குவதாகவும், சோதனையின் பரவல், வீரியத்திற்கு ஏற்ப அதன் கூலியும் விருத்தியடையுமென நபியவர்கள் கூறுகின்றார்கள். மேலும் சோதனைகள் விசுவாசியுடனான அல்லாஹ்வின் நேசத்தினுடைய அடையாளமாகும். அல்லாஹ் நிர்ணயித்த விதி எப்படியும் நிகழ்ந்தே தீரும், இருப்பினும் பொறுமையாக இருந்து, அதனைப் பொருந்திக் கொண்டால் அவனைப் பொருந்திக் கொள்வதன் மூலம் கூலி வழங்குகின்றான். கூலியால் அவ்விசுவாசிக்கு இதுவே போதுமாகும். அவன் கோபப்பட்டு, அச்சோதனையை வெறுத்தால் அல்லாஹ்வும் அவனுடன் பகைக்கின்றான், தண்டனையால் இதுவே அவனுக்குப் போதுமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பொறுமையிழத்தல், சட்டைப்பைகளைக் கிழித்தல், கன்னத்தில் அறைதல் போன்ற தடுக்கப்பட்ட செயல்களைச் செய்யாமலிருக்கும் வரை சோதனைகள் பாவங்களுக்குரிய பரிகாரங்களாகும்.
  2. அல்லாஹ்வின் கண்ணியத்திற்கேற்றவாறு நேசம் எனும் பண்பு அவனுக்குண்டு.
  3. விசுவாசிக்கேற்கப்படும் சோதனை அவனுடைய ஈமானின் அடையாளங்களில் ஒன்றாகும்.
  4. அல்லாஹ்வின் கண்ணியத்திற்கேற்றவாறு பொருத்தம், கோபம் எனும் பண்புகள் அவனுக்குண்டு.
  5. அல்லாஹ்வின் விதியைப் பொருந்திக் கொள்வது விரும்பத் தக்கதாகும்.
  6. அல்லாஹ்வின் விதியை வெறுப்பது ஹராமாகும்.
  7. துன்பங்களின் போது பொறுமையாக இருப்பதை இந்நபிமொழி ஊக்கப்படுத்துகின்றது.
  8. மனிதன் சில வேளை ஒரு விடயத்தை வெறுப்பான், ஆனால் அதில்தான் அவனுக்கு நலவு இருக்கும்.
  9. அல்லாஹ்வின் செயல்களில் அவனது மதிநுட்பம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
  10. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு