+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلَّى الله عليه وسلم قال:
«ما مِنْ أحَدٍ يُسلِّمُ علي إلا ردَّ اللهُ عليَّ رُوحي حتى أردَّ عليه السَّلامَ».

[إسناده حسن] - [رواه أبو داود وأحمد] - [سنن أبي داود: 2041]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
'யாராவது எனக்கு ஸலாம் கூறினால், நான் அவருக்கு பதில் அளிப்பதற்காகவேண்டிய, அல்லாஹ் எனக்கு எனது உயிரை மீண்டும் வழங்குவான்.'

[இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸனானது-சிறந்தது] - [رواه أبو داود وأحمد] - [سنن أبي داود - 2041]

விளக்கம்

இங்கு நபியவர்கள், சமீபமாகவோ, தூரமாகவோ இருந்து யாரெல்லாம் தன் மீது ஸலாம் சொல்கின்றார்களோ, அவர்களுக்குப் பதில் அளிப்பதற்காகத் தனது உயிர் மீண்டும் தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கின்றார்கள். (மரணத்திற்கு அப்பாற்பட்ட) பர்ஸக் உடைய மற்றும் மண்ணறையுடைய வாழ்க்கை என்பது, மறைவான ஓர் அம்சமாகும். அதன் யதார்த்தத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். அவன் அனைத்திற்கும் சக்திபெற்றவன்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூற ஆர்வமூட்டல்.
  2. நபியவர்களது மண்ணறை வாழ்வு என்பது, ஒரு மனிதன் மரணத்துக்குப் பின்னர் வாழும் வாழ்க்கையில் பரிபூரணமான வாழ்க்கையாகும். எனவே, அதன் யதார்த்த நிலையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள்.
  3. யாரெல்லாம், நாம் தற்போது வாழும் வாழ்க்கை போன்று நபியவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று வாதிடுகின்றார்களோ, அவர்களுக்கு இந்த ஹதீஸில் ஆதாரம் இல்லை. அவ்வாறில்லாவிட்டால், இணைவைப்பவர்கள், நபியவர்களிடம் இரட்சிக்கத் தேடுவதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு விடுவார்கள். மாறாக, இது மரணத்திற்கு பின்னரான ஒரு வாழ்க்கையே!
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Урумӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண