عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما مرفوعاً: « قَفْلَةٌ كَغَزْوَةٍ ».
[صحيح] - [رواه أبو داود]
المزيــد ...
அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னுல் ஆஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் "போரிலிருந்து திரும்பி வருவது போரில் ஈடுபடுவது போன்ற நன்மையை பெற்றுத் தரும்". என்று அறிவிக்கிறார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]
இந்த ஹதீஸ் வணக்கங்களை நிறைவேற்றும் போது அடியார்களுக்கு அல்லாஹ் புரிகின்ற அருள் குறித்துப் பேசுகிறது.அதே போல் குறித்த இபாதத்துக்களை நிறைவேற்றச் செல்லும் போதும் அந்த இபாதத்தை செய்து முடித்து திரும்பி வரும் போதும் அவனுக்கு கூலி கிடைப்பபதாகவும் பிரஸ்தாபிக்கிறது.இதனையே நபி (ஸல்)அவர்கள் போரிலிருந்து திரும்பி வருபவரும் போர் செய்த கூலியை பெற்றுக் கொள்கிறார் என்றார்கள். இந்த வகையில் போர் செய்பவரும், போர் களத்திலிருந்து திரும்பி வருபரும் ஒரே நன்மையை பெற்றுக் கொள்கினற்னர். பள்ளிக்குச் சென்று திரும்பி வருபவருக்கும் இவ்வாறே நன்மை எழுதப்படுகிறது.