عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ:
تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً.
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 157]
المزيــد ...
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வெரு தடவையும் கழுவுபராக இருந்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 157]
சில வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழு செய்தால் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வொரு தடவை கழுவக் கூடியவராக இருந்தார்கள். அதாவது முகம் வாய்க் கொப்பளித்தல், நாசுக்கு நீர் செலுத்துதல் உள்ளடங்களாக முகம், இருகைகள், மற்றும் இருகால்களை ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இதுவே கட்டாயம் கழுவவேண்டியதன் அளவாகும்.