عن عَمْرُو بْنُ عَامِرٍ عَنْ أَنَس بن مالك قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ، قُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: يُجْزِئُ أَحَدَنَا الْوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ.
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 214]
المزيــد ...
அம்ர் இப்னு ஆமிர், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாக அறிவித்துள்ளார்கள் :
'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழுச் செய்வார்கள்' என அனஸ் ரழியல்லாஹு கூறியபோது, 'நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?' என அனஸ் ரழியல்லாஹுஅவர்களிடம் நான் கேட்டதற்கு, வுழுவை முறிக்கும் செயல்கள் நிகழாமலிருக்கும் போதெல்லாம் ஒரே வுழுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது' என்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 214]
சிறப்பையும்; கூலியையும் அடைந்து கொள்வதற்காக தனது வுழு முறியாமல் இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பர்ழான ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்பவர்களாக இருந்தார்கள்.
வுழு முறியாமல் இருக்கும் நிலையில் ஒரே வுழுவினால் அதிகமான பர்ழ் தொழுகைகளை தொழுவதற்கு அனுமதியுண்டு.