عن عائشة رضي الله عنها قالت: سمعتُ من رسول الله صلى الله عليه وسلم يقول في بيتي هذا:
«اللَّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ فَارْفُقْ بِهِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1828]
المزيــد ...
எனது இந்த வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள் :
'யா அல்லாஹ் !என் சமுதாயத்தின் விவகாரங்களில் ஒன்றை பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! மேலும் என் சமூகத்தின் விவகாரங்களில் ஒன்றை ஒருவர் பொறுப்பேற்று அவர்களுடன் நலினமாக நடந்து கொள்கிறாரோ அவருடன் நலினமாக நடந்து கொள்வாயாக !
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 1828]
முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களை பொறுப்பேற்றோர் அது சிறிய பொறுப்போ, பெரிய பொறுப்போ அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிராரத்தனை புரிந்துள்ளார்கள். அதாவது அதிகாரத்தைப் பெற்று நலினமாக நடந்து கொள்ளாது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய அவர்களுக்கும் அதே மாதிரியான செயலுக்கேற்ற கூலியை வழங்குமாறு நபியவர்கள் அவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
யார் அவர்களுடன் நலினமாக நடந்து அவர்களின் விவகாரங்களை இலகுபடுத்திக் கொடுக்கின்றாரோ அவர்களுடன் அல்லாஹ் நலினமாக நடப்பதுடன் அவனுடைய விவகாரங்களையும் இலகுபடுத்திக் கொடுக்கிறான்.