عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
«أَتَدْرُونَ مَا الْغِيبَةُ؟»، قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ»، قِيلَ: أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ؟ قَالَ: «إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ فَقَدْ بَهَتَّهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2589]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எங்களிடம்), 'புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், 'இது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதிலளித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்' என்று பதிலளித்தார்கள். அப்போது, 'நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசிவிட்டீர். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால், நீர் அவரைப் பற்றி அவதூறு கூறிவிட்டீர் என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2589]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புறம் பேசுதலின் யதார்த்தத்தைத் தெளிவு படுத்துகின்றார்கள். அதாவது ஒரு சகோதரரைப் பற்றி அவரின் தோற்றம் பற்றியோ அல்லது அவரின் குணம் பற்றியோ அவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர் விரும்பாத ஒரு செய்தியைக் கூறுவதாகும். உதாரணத்திற்கு குறித்த நபர் பற்றி அவர் ஒற்றைக் கண்ணுடையவர், மோசடிக்காரன், பொய்யன் போன்ற மோசமான பண்புகளை அடையாளப்படுத்தும் பெயர்களை கூறுவது புறமாகும். இக்குறித்த பண்புகள் அவரிடத்தில் இருந்தாலும் இது புறம் பேசுவதில் சேரும் என்பதை உணர்தல் வேண்டும்.
குறித்த பண்புகள் அவரிடத்தில் இல்லாது விட்டால் அது புறத்தை விட மிகவும் கடுமையான விடயமான அபாண்டம் பலி சுமத்துதல் என்ற விவகாரத்திற்கு இட்டுச்செல்லும்.