عن عبد الله بن مسعود رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "إن الرقى والتمائم والتِّوَلَة شرك".
[صحيح] - [رواه أبو داود وابن ماجه وأحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "(ஷிர்க்கான வார்த்தைகளைக் கூறி) மந்திரித்தல், தாயத்துகள் கட்டுதல் (கணவன்மார்களை தங்களின்பால் ஈர்ப்பதற்காக பெண்கள் செய்யும்) திவலா (முறை) ஆகியன இணைவைப்பாகும்".
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து கெடுதிகளைத் தடுக்கவோ, நலவுகளை வரவழைக்கவோ மேற்கண்ட முறைகளைக் கையாள்வது இணைவைப்பென நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஏனெனில் கெடுதியைத் தடுத்தல், நலவை வரவழைத்தல் போன்றவற்றிற்கு அதிகாரம் பெற்றவன் அல்லாஹ் மாத்திரமே. இங்கு தகவல் தோரணையில் இடம்பெற்றுள்ள வாக்கியத்தின் அர்த்தம் அச்செயல்கள் தடுக்கப்பட்டதாகும். தாயத்துகள் கண்திருஷ்டிக்காக சிறார்களுக்குக் கட்டப்படுபவையாகும். திவலா என்பது கணவன்மார்களை தங்களின்பால் ஈர்ப்பதற்காக பெண்கள் செய்யும் காரியமாகும். மேற்கண்ட மந்திரித்தல், தாயத்துக் கட்டுதல், திவலா ஆகிய மூன்றும் அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும் எனக் கூறியுள்ளார்கள். மூன்று நிபந்தனைகளுடன் மந்திரித்தல் கூடும். 1. அல்லாஹ்வன்றி மேற்கண்ட மாந்திரீகம் சுயமாக பயனளிக்கும் என எண்ணக் கூடாது. அவ்வாறு எண்ணுவது ஹராமாகும், ஏன் இணைவைப்பாகும் என்றால் மிகையாகாது. மாறாக இது அல்லாஹ்வின் அனுமதியின்றி பயனளிக்க முடியாத சாதாரண ஒரு சிகிச்சை முறை என்பதாகவே எண்ண வேண்டும். 2. மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் அதில் இருக்கக் கூடாது. அல்லாஹ் அல்லாதோரிடம் பிரார்த்திக்கும் வார்த்தைகள், ஜின்களிடம் பாதுகாப்புக் கோருதல் போன்றன இருந்தால் அது ஹராமாகும், இணைவைப்பாகக் கூட இருக்கலாம். 3. அதன் வார்த்தைகள் அறியப்பட்டதாக, விளங்க முடியுமானதாக இருத்தல் வேண்டும். புரிந்து கொள்ள முடியாத, மாயையாக இருந்தால் அதுவும் கூடாது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அநேகமான மக்கள் செய்தாலும் அடிப்படை நம்பிக்கையை அதனைப் பாதிப்பவற்றை விட்டும் பாதுகாத்தல்.
  2. இங்கு கூறப்பட்டுள்ளவற்றைப் பயன்படுத்துவது ஹராமாகும்.
  3. இங்கு கூறப்பட்டுள்ள இணைவைப்பு சிறியதா? அல்லது பெரியதா? என்பதை அதன் மூலம் மனிதன் நாடுவதை வைத்துத் தான் தீர்மானிக்க முடியும் : உண்மையான பின்னனிக் காரணி அல்லாஹ் எனும் நம்பிக்கையுடன் இவற்றை செய்தால் அது சிறிய இணைவைப்பாகும், இவை சுயமாகத் தாக்கம் செலுத்தும் என எண்ணினால் அது பெரிய இணைவைப்பாகும்.
  4. மார்க்க வரையறைக்கு வெளிப்பட்ட மாந்திரீகம் தடைசெய்யப்பட்ட இணைவைப்பாகும்.