عن عائشة رضي الله عنها مرفوعاً: أن النبيَّ صلى الله عليه وسلم كَانَ يَعُودُ بَعْضَ أهْلِهِ يَمْسَحُ بِيدِهِ اليُمْنَى، ويقول: «اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أذْهِب البَأسَ، اشْفِ أنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفاؤكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقماً».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
ரஸூல் (ஸல்) தங்களின் மனைவியரில் ஒருவரிடம் நோய் விசாரிக்கச் சென்றிருந்த போது "மனிதர்களின் இரட்சகனே! நீயே சுகமளிப்பவன்,ஆகையால் நீ தொல்லைகளை அகற்றி சுகத்தை அளித்திடுவாயாக.மேலும் நீ தரும் சுகத்தையன்றி நோய் தங்கி இருக்காதபடி சுகம் தரும்படியான வேறு நிவாரணம் எதுவுமில்லை".என்று கூறியவாறு தங்களின் வலது கையால் தடவினார்கள்.என்று ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் யாரேனும் சுகவீனமடைந்தால் அவர்களிடம் நோய் விசாரிக்கச் சென்று அவர்களுக்கு இந்த துஆவை ஓதி பிரார்த்தனை செய்து தங்களின் வலது கையால் தடவி விடுவார்கள்.மேலும் அனைத்தையும் சிருஷ்டித்து அவற்றை நிருவகித்து வரும் சகல அதிகாரங்களையும் கொண்ட தூய்மையான இரட்சகனே! என்று அவனின் பூரண அதிகாரத்தின் பொருட்டால் நோயை அகற்றி விடுவாயாக,இந்த நோயாளியின் நோயைக் குணப்படுத்தி அவருக்குப் பூரண சுகத்தை அளித்திடுவாயாக, என்று இந்த துஆவைக் கொண்டு இரைஞ்சுவார்கள்.மேலும் "அஷ்ஷாபீ" என்பது அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்று.அதன் பொருள் நோயைக் குணப்படுத்துபவன் என்பதாகும்.எனவே நீ தரும் சுகத்தையன்றி நோய் தங்கி இருக்காதபடி சுகம் தரும்படியான வேறு நிவாரணம் எதுவுமில்லை.என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.அதாவது நோய்க்குரிய உண்மையான நிவாரணம் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றது.மனிதர்கள் அளிக்கும் நிவாரணம் வெறும் ஒரு சாதனம் மாத்திரமே.எனினும் அதனைச் சாத்தியப்படச் செய்பவன் அல்லாஹ் ஒருவனே.எனவேதான் ரஸூல் (ஸல்) அவர்கள் நோயை மீதம் வைக்காமல் அதனைப் பூரணமாகக் குணப்படுத்தி வைக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.