+ -

عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ رضي الله عنه أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ، وَقُلْ بِاسْمِ اللهِ ثَلَاثًا، وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2202]
المزيــد ...

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள், தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் இருந்து உடம்பில் உணர்ந்த ஒரு வலியை நபியவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்போது நபியவர்கள் அவர்களுக்கு இவ்வாறு கூறினார்கள் :
உங்களது உடம்பில் வலியுள்ள பகுதியில் உங்கள் கையை வைத்து, இவ்வாறு கூறுங்கள் : "பிஸ்மில்லாஹ்" (3 தடவைகள்) "அஊது பில்லாஹி வகுத்ரதிஹி மின் சர்ரி மா அஜிது வஉஹாதிரு" (ஏழு தடவைகள்) 'அல்லாஹ்வைக் கொண்டும், அவனது ஆற்றலைக் கொண்டும் நான் உணரும், பயப்படும் இந்த வலியை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2202]

விளக்கம்

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்ளுக்கு ஒரு வலி ஏற்பட்டு, அவர்களைக் கடுமையாகப் பாதித்தது. அவர் நபியவர்களிடம் சென்று முறைப்பட்டார்கள். அப்போது நபியவர்கள், அல்லாஹ் அவருக்கு ஏற்பட்டுள்ள வலியை நீக்கும் விதமாக ஒரு துஆவைக் கற்றுக் கொடுக்கின்றார்கள். அதாவது, அவர்கள் தாம் வலியை உணரும் இடத்தில் தமது கையை வைத்து, இவ்வாறு கூறவேண்டும். பிஸ்மில்லஹ் (3 தடவைகள்) 'நான் (தற்போது) உணரும், (எதிர்காலத்தில் பயத்தையும், கவலையையும் ஏற்படுத்தும் என, அல்லது தொடர்ந்து இருந்து, உடம்பு பூராகப் பரவிவிடலாம் எனப்) பயப்படும் இந்த வலியை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டும், அவனது ஆற்றலைக் கொண்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். (அவனிடமே ஒதுங்குகின்றேன்.)' (ஏழு தடவைகள்).

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. - இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று – ஒரு மனிதன், தனக்குத் தானே ஓதிக்கொள்வது விரும்பத்தக்கதாகும்.
  2. - வெறுப்போ, எதிர்ப்போ இன்றி – முறைப்படுதல் என்பது, தவக்குலுக்கும், பொறுமைக்கும் முரணானது அல்ல.
  3. துஆக் கேட்பதும், காரணிகளைச் செய்வதில் ஒன்றாகும். எனவே, அதன் சொற்கள் மற்றும் எண்ணிக்கைகளை அவ்வாறே பேணிக் கொள்ள வேண்டும்.
  4. இந்த துஆ எல்லா உடல் உறுப்பு வலிகளுக்குமானது.
  5. இந்த துஆவை ஓதும் போது வலியுள்ள இடத்தில் கையை வைக்கவேண்டும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Урумӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண