عن عقبة بن عامر رضي الله عنه مرفوعاً: «إن أحَقَّ الشُّروط أن تُوفُوا به: ما استحللتم به الفروج».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள் : "நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தமானது உங்கள் மனைவியரின் கற்பை ஹலாலாக அடைந்து கொள்ளச் செய்து கொண்ட ஒப்பந்தமாகும்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

திருமணத்தை எதிர்நோக்குவதில் கணவன், மனைவி இருவருக்கும் பல நோக்கங்கள், குறிக்கோள்கள் உள்ளன. மறு தரப்பிற்கு கடைபிடித்து, அமுல்படுத்துவதற்காக சில நிபந்தனைகள் இடப்படுகின்றன. இதற்கு திருமணத்தில் இடப்படும் நிபந்தனைகள் எனப்படுகின்றன, இவை திருமணம் செல்லுபடியாக விதிக்கப்படும் நிபந்தனைகளை விட மேலதிகமான நிபந்தனைகளாகும். அதனை நிறைவேற்றுவதை வலியுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் திருமணத்தில் இடப்படும் நிபந்தனைகள் மூலம் மனைவியுடன் இன்பம் அனுபவிப்பதை ஹலாலாக்கிக் கொள்வதனால் இவை புனிதம் மிக்கது, நிறைவேற்றுவதில் வலுவானது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. கணவன், மனைவியரில் ஒருவர் தனது துணைக்கு உறுதியளித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது கடமையாகும். உதாரணமாக மஹ்ர் தொகையை அதிகரித்தல், குறிப்பிட்ட ஓரிடத்தில் குடியமர்த்துதல் போன்ற மனைவியர் தரப்பினால் இடப்படும் நிபந்தனை, கன்னியாக இருத்தல், நல்ல குடும்பத்தினராக இருத்தல் போன்ற கணவர் தரப்பில் இடப்படும் நிபந்தனையைக் கூறலாம்.
  2. நிபந்தனைகளை நிறைவற்றுவது பற்றி வந்துள்ள இந்தப் பொதுவான நபிமொழியிலிருந்து "தனது முஸ்லிம் சகோதரியை விவாகரத்துச் செய்யும் படி கோருவது ஒரு பெண்ணிற்கு ஹலாலாக மாட்டாது" போன்ற நபிமொழிகள் விதிவிலக்களிக்கப்படுகின்றன. இது போன்றவற்றை நிறைவேற்ற அவசியமில்லை.
  3. ஏனைய நிபந்தனைகளை விட திருமண நிபந்தனைகளை நிறைவேற்றுவது மிக வலியுறுத்தப்படுகின்றது. ஏனெனில் இது மனைவியை ஹலாலாக்கிக் கொள்வதற்குப் பதிலாக இடப்படும் நிபந்தனையாகும்.
  4. செலவு செய்தல், சுகம் அனுபவித்தல், இராத்தரிப்பு போன்ற மனைவியின் உரிமைகள், சுகம் அனுபவித்தல் போன்ற கணவனின் உரிமை அனைத்திலும் மார்க்க ரீதியான வரையறைகள் கிடையாது, அவற்றில் வழக்காறுகளே கவனத்தில் கொள்ளப்படும்.
  5. திருமணத்தில் இடப்படும் நிபந்தனைகள் இரு வகைப்படும் : 1. முறையானது, தம்பதியினரின் நன்நோக்கத்திற்காக, திருமண ஒப்பந்தத்தின் தேற்றத்திற்கு முரண்படாத நிபந்தனைகள் முறையானது, செல்லுபடியானது. 2. முறையற்றது, இது திருமண ஒப்பந்தத்தின் தேற்றத்திற்கு முரண்படும் நிபந்தனைகள். இந்த நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் அளவுகோள் பின்வரும் நபிமொழியாகும் : "ஹலாலை ஹராமாக்கக் கூடிய, ஹராமை ஹலாலாக் கூடிய நிபந்தனைகளைத் தவிர முஸ்லிம்கள் தமக்கிடையில் இட்டுக் கொள்ளும் நிபந்தனையின் அடிப்படையிலாகும்". நிபந்தனையிடல் ஒப்பந்தத்திற்கு முன்னரோ, பின்னரோ அமைவதில் வேறுபாடில்லை.