+ -

عَنْ سَهْلُ بْنُ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ خَيْبَرَ:
«لَأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ غَدًا رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ، يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ»، قَالَ: فَبَاتَ النَّاسُ يَدُوكُونَ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَاهَا، فَلَمَّا أَصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَاهَا، فَقَالَ: «أَيْنَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ؟» فَقِيلَ: هُوَ يَا رَسُولَ اللَّهِ يَشْتَكِي عَيْنَيْهِ، قَالَ: «فَأَرْسِلُوا إِلَيْهِ»، فَأُتِيَ بِهِ فَبَصَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ، فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ، فَأَعْطَاهُ الرَّايَةَ، فَقَالَ عَلِيٌّ: يَا رَسُولَ اللَّهِ، أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟ فَقَالَ: «انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللَّهِ فِيهِ، فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا، خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4210]
المزيــد ...

ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கைபர் நாளில்
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ்வுடையவும் அவனு டைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப்போகிறேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்' என்று கூறினார்கள். அந்தக் கொடி தம்மில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் ஆழ்ந்திருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அலீ பின் அபீதாலிப் எங்கே?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது' என்று கூறப்பட்டது. நபி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்' என்று கூறினார்கள். அலீ (ரழி) அவர்கள் அழைத்து வரப்பட்டபோது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், அலீ (ரழி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரழி) அவர்கள், 'நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?'என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள், 'நிதானமாகச் சென்று, அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது (அரபியரின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றைத் தர்மம் செய்வதை)விட உங்களுக்குச் சிறந்ததாகும' என்று சொன் னார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 4210]

விளக்கம்

தான் யாரிடம் கொடியை கையளிக்கிறேனோ அவரின் மூலம் நாளை கைபர் யூதர்களை முஸ்லிம்கள் வெற்றிகொள்வார்கள் என ஸஹாபாக்களிடம் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அறிவிக்கிறார்கள். கொடி என்பது படையினர் தமக்கு அடையாளாமாக குறியீடாக எடுத்துக்கொள்ளும் ஒரு விவகாரமாகும். குறித்த நபரின் பண்புகளில் ஒன்று அவர் அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நேசிப்பவர், அவரையும் அல்லாஹ்வும் அவனின் தூதரும் நேசிக்கின்றனர். இந்த மாபெரும் சிறப்பை அடைந்து கொள்ளும் ஆர்வம் கொண்டதினால் ஸஹாபாக்கள் யாவரும் இந்த கொடி யாரிடம் வழங்கப்பட உள்ளதோ என்ற பேச்சில் மூழ்கி இரவு முழுவதையும் கழித்தனர். அதிகாலையானதும் குறித்த இம்மாபெரும் சிறப்பை அடைந்து கொள்ளவதை எதிர்பார்த்து அவர்கள் அனைவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்றனர்.
அப்போது நபியவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப்பற்றி விசாரித்தார்கள்
அதற்கவர்கள் அலி ரழி ஒரு நோயாளி அவர் கண்ணோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினர்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அலி (ரழி) அவர்களை அழைத்துவர ஆட்களை அனுப்பினார்கள். அலி (ரழி) அவர்கள் வந்ததும் தனது புனித எச்சிலை அவரின் இரு கண்களிலும் துப்பி அவருக்காகப் பிராரத்தனை புரிய, அவரின் நோய் முழுமையாக குணமடைந்து விட்டது. அவ்வேளை அவரிடன் முஸ்லிம் சேனையின் கொடியை கொடுத்து, எதிரியின் கோட்டையையை மிகவும் மெதுவாக அனுகி அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் இணங்கி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளை அறிவித்துக்கொடுக்குமாறும் நபியவர்கள் கட்டளைப்பிரப்பித்தார்கள்.
பின்னர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை அழைப்பணியின் சிறப்பு குறித்து குறிப்பிடுகையில், இறை அழைப்புப்பணியில் ஈடுபடுவர், ஒரு நபர்; நேர்வழி பெறக் காரணமாக இருப்பாராயின் அறபுகளின் செல்வங்களில் மிகவும் பெறுமதிக்க உயர்ந்த செல்வமான சிவப்பு ஒட்டகையை பெற்றிருப்பதை விட மிகவும் சிறந்தது. அதனை அவர் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார், அல்லது அதனை ஸதகா தர்மம் செய்து விடுவார் எனத் தெளிவுபடுத்தினார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அலி இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவரை அல்லாஹ்வும் அவனின் தூதரும் நேசிக்கிறார்கள் என்றும், அவரும் அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நேசிப்பவர் என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சாட்சி கூறியுள்ளமை.
  2. நன்மையானவற்றில் முந்திக்கொள்ள வேண்டுமென்ற ஸஹாபக்களின் ஆர்வம்.
  3. போரின் போது ஒழுக்கத்தை கடைப்பிடித்து அவசியமற்ற கூச்சல்கள் மற்றும் சப்தங்ககளை தவிர்ந்து கொள்ளுதல் இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.
  4. யூதர்களுக்கெதிரான வெற்றியை அறிவித்தமை, அல்லாஹ்வின் உதவியால் நபியவர்கள் மூலம் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்வலி குணமடைந்தமை போன்றன நபித்துவத்தின் சில அடையாளங்களாகும்.
  5. இஸ்லாத்தில் மக்களை நுழைவிப்பதே, ஜிஹாத்தின் உன்னதமான –பிரதான- குறிக்கோள் ஆகும்.
  6. தஃவாவில் படிமுறை ஒழுங்குளை கடைப்பித்தல் பிரதானமானது, அந்த வகையில் ஒரு காபிரிடம் முதலில் ஷஹாதா கலிமாக்களை மொழிவதன் ஊடாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தல் அதன் பிறகு இஸ்லாத்தின் கடமைகளை செய்யுமாறு ஏவுதல்.
  7. இஸ்லாத்தின் பால் மக்களை அழைப்பதன் சிறப்பு. இப்பணியில் அழைப்பாளர் அவ்வழைப்பை ஏற்று நேர்வழி பெறுபவர் இருவருக்கும் நன்மை உண்டு. அழைக்கப்படுவர் நேர்வழிபெறுகிறார், அழைப்பவருக்கு மகத்தான கூலி கிடைக்கிறது.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு