+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ المَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5707]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது.சிங்கத்திடமிருந்து நீ எப்படி விரண் டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து விரண்டோடு."

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 5707]

விளக்கம்

எல்லா விவகாரங்களின் அதிகாரம் அல்லாஹ்வின் கையில் உள்ளது என்பதையும், அவனுடைய கட்டளை மற்றும் தீர்மானமத்தின் மூலமேயேன்றி எதுவும் நடக்காது என்பதை தெளிவுபடுத்தவும், ஜாஹிலிய்யாக் கால சில நடைமுறைகளை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். அவை பின்வருமாறு :
முதலாவது : நோயானது தானாக பரவும் என ஜாஹிலிய்யாக்கால மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். இயல்பாக ஒரு நோயாளியிடமிருந்து இன்னொரு நோயாளிக்கு குறித்த நோயானது தொற்றும் என நம்புவதை தடை செய்தார்கள். ஏனெனில் அல்லாஹ்வே இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பவன். அவனே நோயை இறக்குகிறான்; அதனை நீக்கி நோய் நிவாரணத்தையும் வழங்குகிறான். நோய் தொற்றுதல் என்பது அவனின் நாட்டம் மற்றும் தீர்மானத்தின் படியே நிகழும்.
இரண்டாவது:ஜாஹிலிய்யாக் கால மக்கள் ஒரு பயணத்திற்கோ அல்லது வியாபாரத்திற்கோ செல்ல நாடினால் பறவையொன்றை பறக்க விடுவார்கள். அந்தப் பறவை வலது பக்கமாக சென்றால் அதனை நற்சகுணமாக கருதுவார்கள். ஆனால் அது இடதுபுறம் பறந்தால் அவர்கள் அதைத் தீய சகுனமாகக் கருதி திரும்பி விடுவார்கள். பறவைகளை கெட்ட சகுனமாகக் கருதும் இத்தகைய செயலை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தடை செய்து அது தவறான நம்பிக்கை என்று தெளிவு படுத்தினார்கள்.
மூன்றாவது : ஜாஹிலிய்யாக் கால மக்கள் ஆந்தை ஒரு வீட்டின் மீது விழுந்து விட்டால் அந்த வீட்டில் உள்ளோருக்கு சோதனை - பேரழிவு ஏற்பட்டு விடும் என கூறிக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு துற்சகுணம் கருதுவதை நபியர்வகள் தடை செய்தார்கள்.
நான்காவது: சந்திர நாட்காட்டியில் இரண்டாவது மாதமான ஸஃபர் மாதத்தை கெட்ட சகுனமாக எடுத்துக் கொள்வதை தடை செய்தார்கள். 'ஸஃபர்' என்பது: கால்நடைகள் மற்றும் மக்களையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வயிற்றில் காணப்படும் ஒருவகை புழுவாகும். இது சிரங்கு நோயை விட கடுமையானதும் பிறரில் தொற்றக் கூடியதுமாகும் என்று ஜாஹிலிய்ய மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய நம்பிக்கையை பிழையானது என நபியவர்கள் அதனை நிராகரித்தார்கள்.
ஐந்தாவது: தற்பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும், உயிரை பாதுகாக்கும் முகமாகவும், அல்லாஹ் கட்டளையிட்டுள்ள காரணகரியங்களை மேற்கொள்ளுதல் என்ற அடிப்படையிலும்; (முன்னெச்சரிக்கையாக) சிங்கத்திடம் இருந்து வெகுதூரம் விலகியிருப்பது போல் தொழுநோயாளியிடம் இருந்து விலகி இருக்குமாறு கட்டளையிட்டார்கள்;. தொழுநோய் என்பது : மனிதனின் உறுப்புகளைத் சிறிது சிறிதாக அரிக்கும் ஒரு வகை நோயாகும்;.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதும், அவனைச் சார்ந்திருப்பதும், அனுமதிக்கப்பட்ட வழிகளைப் பயன்படுத்துவதும் கடமையாகும்.
  2. அல்லாஹ்வின் விதி மற்றும் தீர்ப்பை நம்புவதும், அத்துடன் விவகாரங்களின் விளைவுகள் அல்லாஹ்வின் கையில் உள்ளது என்றும், அவனே அவற்றை பயன்மிக்கதாகவோ அல்லது பயனற்றதாகவோ ஆக்குகிறான் என்று நம்புவதும் கடமையாகும்.
  3. கருப்பு மற்றும் சிவப்பு போன்ற சில நிறங்கள் அல்லது குறிப்பிட்ட எண்கள், பெயர்கள், நபர்கள் அல்லது ஊனமுற்றவர்கள் போன்றவைகளில் கெட்ட சகுணம் -தீட்டு- இருப்பதாக கருதி மக்கள் செய்துகொண்டிருக்கும் நடை முறைகளை செல்லுபடியற்றதாக்குவதாகும்.
  4. தொழுநோயாளி மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டோரிடம் அருகில் செல்வது தடைசெய்யப்பட்டதாகும். அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட விளைவுகளுக்கு பொதுவாக அதற்கான காரணிகளில் ஒன்று வழிவகுக்க முடியும். அந்த வகையில் காரணங்கள் சுயாதீனமாக செயல்படமுடியாது. மாறாக, அல்லாஹ் நாடினால், அவற்றின் வீரியத்தை பறித்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது செய்து விடுகிறான். அவன் நாடினால், அதன் வீரியத்தை தக்க வைத்துக் அதனால் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறான்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு