عن عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «لا تُطْروني كما أَطْرت النصارى ابنَ مريم؛ إنما أنا عبده، فقولوا: عبد الله ورسوله».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக உமர் (ரலி) கூறுகின்றார் : "கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) உயர்த்தியதைப் போன்று என்னை நீங்கள் உயர்த்திட வேண்டாம், நான் ஓர் அடியானே, எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

ஓரிறைக் கொள்கை மீீது கொண்ட பற்றினாலும், முன்னைய சமூகங்கள் வீழ்ந்த அதே இணைவைப்பில் தனது சமூகமும் விழும் என்ற அச்சத்தினாலும் தன் விடயத்தில் அளவு கடப்பதையும், எல்லை மீறிப் புகழ்வதையும் எச்சரித்தார்கள். இது கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைப் பண்புகளை வைத்தும், அல்லாஹ்வின் புதல்வர் என்றும் வர்ணித்து இணைவைப்பில் வீழ்ந்ததைப் போன்று நபியவர்களையும் அல்லாஹ்வின் பிரத்தியேக பண்புகள், செயல்களை வைத்து வர்ணிப்பதைப் போன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான் : ""c2">“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: "c2">“இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை". பின்பு "நான் ஓர் அடியானே, எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்" என்றார்கள். அதாவது அல்லாஹ் அடிமைத்தனம், தூது ஆகியவற்றை வைத்து என்னை வர்ணித்ததைப் போன்றே நீங்களும் வர்ணியுங்கள், அடிமைத்தனத்தை மீறி கிறிஸ்தவர்களைப் போன்று இறைமை, இறையியல் நிலைக்கு என்னை உயர்த்தி எல்லை மீறி விட வேண்டாம். ஏனெனில் நபிமார்களின் தகுதி அல்லாஹ்வின் அடிமை, தூதர் என்பதாகும். இறைமை என்பது அல்லாஹ்விற்கு மாத்திரம் தகுதியான ஒன்றாகும். இவ்வளவுக்குப் பின்னாலும் நபியவர்கள் எச்சரித்த அதே விடயத்தில் சிலர் வீழ்ந்துள்ளனர், அவர்களில் நீரும் சேர்ந்திடாதே.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. புகழ்ச்சியில் அளவு கடத்தல், எல்லை மீறுதல், பொய்யை வைத்துப் புகழ்தல் போன்றன பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவை சிலவேளை இணைவைப்பிற்கு இட்டுச் சென்று, அடியானை இரட்சகனின் தரத்தில் வைத்து, அவனது பண்புகளால் வர்ணிக்க வழிகோறுகின்றது.
  2. கிறிஸ்தவர்களுடைய நிராகரிப்பு ஈஸா (அலை) மற்றும் பாதிரிகள், அருட்சகோதரிகள் விடயத்தில் அளவுகடந்து சென்றதாலும், ஈஸா (அலை) அல்லாஹ்வின் புதல்வர் எனக் கூறியதாலுமே ஏற்பட்டது, அதன் விளைவாக தமது தவறான சிந்தனைகளை நியாயப்படுத்த, தமது புனித நூல்களையே திரிபுபடுத்தும் அளவிற்குச் சென்றுவிட்டார்கள்.
மேலதிக விபரங்களுக்கு