عن عائشة رضي الله عنها ، قالت: لما نُزِلَ برسول الله صلى الله عليه وسلم ، طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً له على وجهه، فإذا اغْتَمَّ بها كشفها فقال -وهو كذلك-: "لَعْنَةُ الله على اليهود والنصارى، اتخذوا قبور أنبيائهم مساجد -يُحَذِّرُ ما صنعوا". ولولا ذلك أُبْرِزَ قَبْرُهُ، غير أنه خَشِيَ أن يُتَّخَذَ مسجدا.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்!'' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி(ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்களுக்கு மரணவேளை நெருங்கிய போது மரணப் படுக்கையில் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக எனக் கூறினார்கள். ஏனெனில் அவர்கள் தமது நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். யூத, கிறிஸ்தவர்கள் வீழ்ந்த அதே பாவத்தில் தமது சமூகமும் வீழ்ந்து, தனது மண்ணறையும் கட்டப்படாமல் எச்சரிக்கவே நபியவர்கள் இதனைக் கூறியதாக அன்னாரின் வார்த்தையிலிருந்து அன்னையவர்கள் விளங்கிக் கூறினார்கள். நபியவர்களை வீட்டிற்கு வெளியே அடக்கம் செய்ய விடமால் தோழர்களைத் தடுத்ததும் அன்னாருடைய சமாதி மஸ்ஜிதாக எடுக்கப்படும் என்ற அச்சம்தான் என்பதை அன்னையவர்கள் தெளிவுபடுத்தினார்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபிமார்கள், நல்லடியார்களின் சமாதிகளை அல்லாஹ்வைத் தொழும் மஸ்ஜித்களாக ஆக்குவது தடை செய்யப்பட்டதாகும். ஏனெனில் அது இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.
  2. ஓரிறைக் கொள்கை மீதான நபி (ஸல்) அவர்களின் தீவிர ஆர்வமும், கரிசனையும் வெளிப்படுவதுடன் தனது சமாதி அளவு கடந்து மகிமைப்படுத்தப்படுவது பற்றிய அவர்களது அச்சமும் இங்கு தெளிவாகின்றது. ஏனெனில் அதுவும் இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.
  3. சமாதிகள் மீது கட்டுதல், அவற்றை பள்ளிகளாக ஆக்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடும் யூத, கிறிஸ்தவர்கள், அவர்களைப் போன்று செயற்படுபவர்களை சபிக்க முடியும்.
  4. நபி (ஸல்) அவர்கள் வீட்டில் அடக்கம் செய்யப்படக் காரணம் அவர்கள் விடயத்தில் மக்கள் அளவு கடந்து வழி தவறிப் போகமலிருப்பதற்காகவே.
  5. நபி (ஸல்) அவர்களும் ஒரு மனிதரே, ஏனைய மனிதர்களைப் போன்று அவர்களுக்கும் கடின நிலமைகள், மரணம் போன்றன சம்பவிக்கும்.
  6. தனது சமூகம் மீதான நபி (ஸல்) அவர்களின் அக்கறை.
  7. தனி நபர்களின்றி பொதுவாக இறை நிராகரிப்பாளர்களை சபிப்பது கூடும்.
  8. சமாதிகள் மீது கட்டுவது பொதுவாகவே ஹராமாகும்.
  9. தனியாக எடுத்துக் காட்டுவதற்காக அறிஞர்களின் சமாதிகள் மீது கட்டுவதை ஆகுமாக்குவோருக்கு இந்த நபிமொழியில் மறுப்பு உள்ளது.
  10. சமாதிகள் மீது கட்டுவது யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறையாகும்.
  11. ஆஇஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மார்க்க சட்ட விளக்கத் திறமையை இங்கு அவதானிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு